நாடே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும், 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் சனிக்கிழமையன்று தாக்கல் செய்ய உள்ளார். பொதுவாக நாட்டின் பொருளாதாரம் முதல் சாமானிய மக்கள் என அனைத்து தரப்புகளிலும் பட்ஜெட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அடுத்ததாக பிப்ரவரி 5-7ம் தேதிகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மந்தகதியில் உள்ள நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவதற்கான கொள்கை செயல்திட்டதை ரிசர்வ் வங்கி வகுக்கும். 7ம் தேதியன்று கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி அறிவிக்கும்.

இதனால் அடுத்து வரும் 10 நாட்களும் இந்தியாவின் பொருளாதார பாதைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், 2023-24ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது.
ஆனால் இந்த நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதம் என்ற அளவில் மந்தமாக இருந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி மிதமான அளவில் இருப்பதால், நிதி ஒருங்கிணைப்பில் (நிதி பற்றாக்குறை குறைப்பு) தொடர்ந்து அரசு கவனம் செலுத்தும்.
நடப்பு 2024-25ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 4.8 சதவீதமாக வைத்திருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 2025-26ம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கை 4.5 சதவீதமாக மத்திய அரசு ஒருங்கிணைக்கும்.
என்னதான் ரிசர்வ் வங்கி டிவிடெண்டாக மத்திய அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி கொடுக்க வாய்ப்பு இருந்தாலும், வருவாய் அதிகரிப்புக்கு பதிலாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் செலவினங்கள் குறைவதால் பட்ஜெட்டில் நிதி உந்துதல் எதிர்மறையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலவீனமான தேவையை நிவர்த்தி செய்வதற்கும், மீட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் தனியார் மூலதன செலவினங்களை அதிகரிப்பதற்கும் எதிர்வரும் பட்ஜெட்டில் ஊக்க நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, 0.50 சதவீதம் வட்டி குறைப்பு (ரெப்போ ரேட்) நடவடிக்கையை தொடங்க வாய்ப்புள்ளது.
இது தேவையை தூண்ட உதவவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெதுவான வளர்ச்சியை எதிர்த்து போராடுவதற்கு ரிசர்வ் வங்கி சமீபத்திய மாதங்களில் பணப்புழக்க ஊக்க நடவடிக்கைகளை வழங்கியுள்ளதால், பணப்புழக்க நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்துவது ஏற்கனவே தெளிவாக தெரிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications