உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வந்தே தீருவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக கூறி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிக்கு இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது ஜெலன்ஸிக்கும் டிரம்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இதுநாள் வரை அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வோம் என டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிக்கு எச்சரிக்கை விடுத்தார். 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது.

இந்தப் போரினால் இரண்டு தரப்பினருமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போரினை பொறுத்தவரை உக்ரைனுக்கு பல்வேறு வழிகளிலும் அமெரிக்கா உதவியாக நின்றிருக்கிறது . ஆயுத விநியோகத்தில் தொடங்கி பல்வேறு நிதி உதவிகளையும் வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் போருக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்குவது தேவையற்றது என கூறி வரக்கூடிய டிரம்ப் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரப் போவதாக அறிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 18ஆம் தேதி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் பேச்சு வார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கோ பிற ஐரோப்பிய நாடுகளுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. இது ஒரு புறம் இருக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வரவழைத்து வெள்ளை மாளிகையில் மற்றொரு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேச்சு வார்த்தையிலும் ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
இந்த பேச்சுவார்த்தையின் போது டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே டி வான்ஸ் ஆகிய இருவரும் உக்ரைன் அதிபருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தாங்கள் சொல்லும்படி கேட்கவில்லை என்றால் போருக்கு வழங்கும் ஆதரவை முழுவதுமாக திரும்ப பெற்றுக் கொள்வோம் என டிரம்ப் எச்சரித்தார். இந்த நிலையில் எதுவும் கூறாமல் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிவிட்டார்.
இது ரஷ்யாவுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருப்பது அமெரிக்கா தான். அமெரிக்கா தன்னுடைய ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டால் தற்போது இருப்பதைப் போல தீவிரமாக உக்ரைனால் சண்டையிட முடியாது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அமெரிக்கா ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த சூழலில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு முழு வீச்சில் கைகொடுக்க முடியாது என்றே சொல்லப்படுகிறது. டொனால்ட் டிரம்ப்பை பொறுத்தவரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஒரு காமெடியன் என கூறி அவமானப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். மேலும் நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைப்பதற்கு நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம் என்றும் டிரம்ப் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் அளித்து வந்த ஆதரவு தான். தற்போது இந்த விவகாரத்தில் அமெரிக்கா தனியாகவும் ஐரோப்பிய நாடுகள் தனியாகவும் பிரிந்து இருக்கின்றன. இது உக்ரைனுக்கு இதுநாள் வரை கிடைத்து வந்த நிதி உதவி மற்றும் ஆயுத உதவிகளை தடுக்கும்.
எனவே சூழல்கள் தற்போது ரஷ்யாவுக்கு சாதகமாக மாறி இருப்பதாகவே சொல்லப்படுகிறது. ஏற்கனவே மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா அரசு இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என கூறப்படுகிறது. உக்ரைனை பொறுத்தவரை அமெரிக்காவை நம்பி இருந்து தற்போது ஏமாந்து நிற்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications