பெங்களூரு: இந்தியாவில் தற்போது குவிக் காமர்ஸ் பிரிவில் ஸெப்டோ, பிளிங்கிட் ஆகிய நிறுவனங்கள் வேகமான வளர்ச்சியை கண்டு வருகின்றன. ஆனால் இத்தகைய நிறுவனங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த ஒரு நிறுவனம் தற்போது காணாமல் போய்விட்டது.
சென்னை பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள் டன்சோ என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். நகர்ப்புறவாசிகள் அன்றாடம் பயன்படுத்தி வந்த ஒரு வார்த்தை டன்சோ. இந்தியாவில் குவிக் காமர்ஸ் துறையில் களமிறங்கிய முன்னணி நிறுவனம் தான் டன்சோ.

உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களாக ஸ்விக்கியும், சோமேட்டோவும் வளர்ந்து வந்த காலத்தில் டன்சோ ஒரு புதுமையான யோசனையுடன் களத்தில் நுழைந்தது.
நமக்குத் தேவையான ஒரு பொருளை நாம் இருக்கும் இடத்திலிருந்து மற்றவர்களுக்கு அனுப்பி வைக்க முடியும் ஒரு குறிப்பிட்ட கடைகளில் இருந்து பொருட்களை நாம் வாங்கி டெலிவரி செய்யலாம், பார்சல் அனுப்பலாம் என பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் சவுகரியமாக கருதினர். இதனால் சிறப்பான வளர்ச்சி பெற்ற நிறுவனமாக டன்சோ மாறியது. ஆனால் தற்போது டன்சோவால் வர்த்தகப் போட்டியை தாக்கு பிடிக்க முடியவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே டன்சோ நிறுவனம் சரிவிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்தது. இந்த நிலையில் தான் படிப்படியாக ஊழியர்களையும் பணி நீக்கம் செய்தது கிட்டத்தட்ட 75 சதவீத ஊழியர்களை கடந்த மாதம் நிறுவனம் வேலையில் இருந்து நீக்கிவிட்டது. வெறும் 50 பேர் மட்டுமே டன்சோ நிறுவன ஊழியர்களாக செயல்பட்டு வந்தனர்.
டன்சோ நிறுவனத்தில் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமலும் முன்னாள் மற்றும் தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு சம்பளங்களை வழங்க முடியாமலும் மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்தித்தது. ஒரு காலத்தில் டன்சோ நிறுவனத்தின் மதிப்பீடு 775 மில்லியன் டாலர்களாக இருந்தது.
ஆனால் அடுத்தடுத்த கட்டங்களில் டன்சோ நிறுவனம் எதிர்பார்த்த அளவு நிதியை திரட்ட முடியவில்லை. இதன் பின்னர் நிதி திரட்டுவதற்காக பல்வேறு முயற்சிகளை டன்சோ மேற்கொண்டது. ஆனால் அது எதுவுமே கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் ரஜினிஷ்குமார் என்பவர் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் காலியாக இருக்கும் டன்சோ அலுவலக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் பெங்களூருவின் இந்திரா நகரில் இருக்கக்கூடிய டன்சோ அலுவலகத்தை பாருங்கள் ஆள் நடமாட்டமே இல்லாமல் காணப்படுகிறது. இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றாக டன்சோ நிறுவனம் இருந்தது.
தற்போது இதன் ஊழியர்கள் வேலை இழந்துவிட்டனர், டன்சோ நிறுவன அலுவலகத்தில் இந்த புகைப்படத்தை பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு பலரும் தங்களுடைய பின்னூட்டங்களை பதிவு செய்துள்ளனர். இப்படித்தான் பல நிறுவனங்கள் மிக வேகமான வளர்ச்சி அடைகின்றன நிதி திரட்டுகின்றன ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அத்தகைய முதலீட்டாளர்களே இந்த நிறுவனங்களின் அழிவுக்கு காரணமாகி விடுகின்றனர் என ஒரு பயனர் கூறியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூருவின் இந்திரா நகர் பகுதியை தலைமை இடமாகக் கொண்டுதான் டன்சோ தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூரு, டெல்லி, குரு கிராம், புனே ,ஹைதராபாத், சென்னை ,மும்பை ஆகிய நகரங்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த டன்சோ செயலி வாயிலாக பேக்கேஜ் பிக்கப் மற்றும் டிராப், மளிகை சாமான்கள் டெலிவரி, மருந்து டெலிவரி நகரத்திற்குள்ளான கொரியர் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டன.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications