இந்திய ஊழியர் மேல இவ்ளோ பாசமா? – 2010ஆம் ஆண்டிலேயே இந்தியாவுக் ஓடி வந்த மார்க் ஜக்கர்பர்க்..!

கோவா: அண்மையில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு மிக பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கக்கூடிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தனது மனைவியோடு ஆனந்த அம்பானி திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால் திருமணத்திற்காக மார்க் ஜக்கர்பர்க் தம்பதி சகிதமாக இந்தியா வருவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே வேறு ஒருவரின் திருமணத்திற்காக மார்கும் அவரது மனைவியும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

 இந்திய ஊழியர் மேல இவ்ளோ பாசமா? – 2010ஆம் ஆண்டிலேயே இந்தியாவுக் ஓடி வந்த மார்க் ஜக்கர்பர்க்..!

பேஸ்புக் நிறுவனம் தொடங்கப்பட்டு அதன் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருந்த போது மார்க் மற்றும் அவரது மனைவி பிரிஸ்சிலா சான் ஆகிய இருவரும் தங்களுடைய பேஸ்புக் ஊழியரின் திருமணத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்திருந்தனர். ஆதித்யா அகர்வால் என்பவர் பேஸ்புக் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்தவர். அவருடைய திருமண நிகழ்வுக்காக 2010 ஆம் ஆண்டு மார்க் தன்னுடைய மனைவியோடு கோவாவிற்கு வருகை தந்திருந்தார். இதற்காக மார்க் சில நாட்கள் கோவாவிலேயே தங்கியிருந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

2005 ஆம் ஆண்டு ஆதித்யா அகர்வால் பேஸ்புக் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதாவது பேஸ்புக் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த ஆரம்பகட்ட ஊழியர்களில் ஆதித்யா அகர்வாலும் ஒருவர். 6 ஆண்டு காலம் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஆதித்யா அகர்வால் பேஸ்புக் நிறுவனத்தின் ப்ராடக்ட் இன்ஜினியரிங் பிரிவின் இயக்குனராக முதன் முதலில் பதவி வகித்தவர். பேஸ்புக்கின் தேடு பொறியை மேம்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவராக ஆதித்ய அகர்வால் அறியப்படுகிறார்.

ஆதித்யா அகர்வாலுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கோவாவில் ஆடம்பரமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மார்க் ஜக்கர்பர்க்கும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர். அப்போது இந்தியாவின் புகழ்பெற்ற ஷெர்வானி ஆடையை அணிந்து கொண்டு மார்க் திருமண வரவேற்பில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி கோவா வருகை தந்த சில நாட்கள் இங்கேயே தங்கி டிரெக்கிங் உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

தற்போது ஆதித்யா அகர்வால் பேஸ்புக் நிறுவனத்தில் பணியில் இல்லை என்றாலும் மார்க் மற்றும் ஆதித்யாவுக்கு இடையிலான நட்பு தொடர்வதாகவும் இருவரும் அவ்வப்போது நிகழ்ச்சிகளில் சந்தித்து கொள்வதாகவும் ஆதித்யா அகர்வாலே ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+