NRI: அமெரிக்காவில் இந்தியர்களின் உண்மையான பவர்.. புட்டு புட்டு வைக்கும் டேட்டா..!!

உலகம் முழுக்க இந்திய மக்களும், தமிழ் மக்களும் புலம்பெயர்ந்திருந்தாலும் அமெரிக்காவில் இருக்கும் இந்திய மக்களின் பவர் தனி ரகம் என்றால் மிகையில்லை. எந்தொரு விஷயத்தையும் புள்ளிவிபரங்கள் உடன் கூறும் போது உண்மைக்கு மிக அருகில் இருக்கும், இப்படி தான் இந்த விஷயத்தையும் குட்ரிட்டன்ஸ் அணுக போகிறது.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோர் சமூகம் அந்நாட்டில் ஒரு செழிப்பான மற்றும் செல்வாக்கு மிக்க சமூகமாக உருவாகி உள்ளது. பிற நாட்டவரை காட்டிலும் அமெரிக்காவில் இந்தியர்களின் வாழ்க்கை தரம், வருமானம் ஈட்டும் விகிதம் என அனைத்தும் உச்சத்தில் உள்ளது.

NRI: அமெரிக்காவில் இந்தியர்களின் உண்மையான பவர்.. புட்டு புட்டு வைக்கும் டேட்டா..!!

அமெரிக்காவில் இந்திய மக்கள்தொகை:
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் மொத்தம் 51 லட்சம் பேர் உள்ளனர், இதில் இந்தியாவில் பிறந்தவர்கள் மற்றும் அமெரிக்காவில் இந்திய பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் அடங்குவர். இந்த 5 5 லட்சம் பேர் என்பது அமெரிக்க மக்கள் தொகையில் வெறும் 1.5% மட்டுமே, ஆனால் அமெரிக்காவின் வரி வருமானத்தில் இந்திய வம்சாவளியினரின் பங்கு 5-6 சதவீதமாகும்.

மக்கள் தொகை பங்கீட்டில் குறைவாக இருந்தாலும் வரி வருமானத்தில் அதிக பங்கு வகிக்க முக்கயமான காரணம், அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான இந்தியர்கள் உயர் வருமான மற்றும் ப்ரொபஷனல் பிரிவுகளில் பணியாற்றுகின்றனர்.

கல்வி மற்றும் ப்ரொபஷனல் கரியர்:
அமெரிக்காவில் இருக்கும் இந்திய சமுகத்தின் வலிமைக்கும் வெற்றிக்கும் கல்வி தான் அடித்தளமாக உள்ளது. எப்படியென்றால் அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவளியினரில் சுமார் 78% பேர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் கல்வியை பெற்றுள்ளனர். இது அமெரிக்க மக்களின் தேசிய கல்வி சராசரியான 36% எண்ணிக்கையை ஒப்பிடுகையில் 2 மடங்கு அதிகமாகும்.

இந்தியர்களின் கல்வி சாதனை தான் அவர்களுக்கு ப்ரொபஷனல் கரியரில் வெற்றியாக மாறுகிறது. ஏனெனில் 76% பேர் மேலாண்மை, வணிகம், அறிவியல் மற்றும் கலை துறைகளில் பணியாற்றுகின்றனர்.

NRI: அமெரிக்காவில் இந்தியர்களின் உண்மையான பவர்.. புட்டு புட்டு வைக்கும் டேட்டா..!!

கார்ப்ரேட் வெற்றி:
இந்திய வம்சாவளியினர் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் 16 நிறுவனங்களில் CEOக்களாக உள்ளனர், மேலும் இந்தியர்கள் சுமார் 72 யுனிகார்ன்களை நிறுவியுள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 648 யூனிகார்ன் உள்ளது, இதில் 11% இந்தியர்கள் உருவாக்கியது.

கல்வி, ஹோஸ்பிடாலிட்டி:
ஒவ்வொரு ஆண்டும் 2.7 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்கு செல்கின்றனர், இது அமெரிக்க கல்வி துறைக்கு ஆண்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் பங்களிக்கிறது.

மேலும், அமெரிக்காவில் உள்ள 60% ஹோட்டல்களை இந்திய புலம்பெயர்ந்தோர் நிர்வகிக்கின்றனர், இது ஹோஸ்பிடாலிட்டி துறையில் இந்தியர்களின் ஆதிக்கத்தை காட்டுகிறது.

கல்வி உலகத்தில் சுமார் 22,000 இந்திய வம்சாவளி ஆசிரியர்களா அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர், இது கல்வி துறையை வலுப்படுத்துகிறது.

NRI: அமெரிக்காவில் இந்தியர்களின் உண்மையான பவர்.. புட்டு புட்டு வைக்கும் டேட்டா..!!

வர்த்தகம், முதலீடு:
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக அளவு என பார்த்தால் 2022-23-இல் 51 பில்லியன் டாலராக உள்ளது.

2000ல் இருந்து சுமார் 63 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளது.

குடும்ப மற்றும் சமூக இணைப்பு:
அமெரிக்காவில் இருக்கும் பல நாட்டு மக்களை ஒப்பிடுகையில் இந்தியர்கள் வலுவான குடும்ப மதிப்புகளைக் கொண்டுள்ளனர். இதை எப்படி சொல்லப்படுகிறது என்றால் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களில் 70% பேர் திருமணமானவர்களாகவும், 20% பேர் பல தலைமுறைகள் இணைந்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த குடும்ப பிணைப்பு தான் இந்தியர்கள் தொடர்ந்து கலாச்சார வேர்களை விடாமல் பிடித்து வைக்கவும், ஒரு புதிய நாட்டில் வாழும் போதும் தங்கள் அடையாளத்தை இழக்காமல் இருக்கவும் உதவுகிறது.

NRI: அமெரிக்காவில் இந்தியர்களின் உண்மையான பவர்.. புட்டு புட்டு வைக்கும் டேட்டா..!!

இந்திய புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுகிறது. அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கை நீக்கிவிட்டால் பெரிய ஓட்டை இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இது ஒரு கனவு, கடின உழைபின் கதை. இது எளிதாக வந்துவிடவில்லை, காலம் காலமாக அமெரிக்காவுக்கு சென்ற மக்களின் உழைப்பின் காரணமாகவே இன்று அந்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக உயர்ந்துள்ளோம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+