ராயல் என்பீல்டு புல்லட் சக்சஸ்-க்கு பின்னாடி ஒரு குடும்பமே இருக்கே..!

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் என்றாலே 'தனி கெத்து தான்' என்ற பெயரை உருவாக்கி மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருக்கிறது Eicher Motors நிறுவனம். இந்த வெற்றியின் பின்னணியில் இருப்பது விக்ரம் லால் என்பவரின் குடும்பம்..

இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் குழுமமான Eicher Motors நிறுவனத்தின் உரிமையாளர் தான் விக்ரம் லால். 1942 ஆம் ஆண்டு பிறந்த விக்ரம் லால் ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்றார்.

 ராயல் என்பீல்டு புல்லட் சக்சஸ்-க்கு பின்னாடி ஒரு குடும்பமே இருக்கே..!

1966 ஆம் ஆண்டு விக்ரம் லால் தன்னுடைய தந்தையின் Eicher Motors நிறுவனத்தில் இணைந்தார். இவரது தந்தை 1959 ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு டிராக்டர்களை தயாரிப்பதற்காக இந்த நிறுவனத்தை தொடங்கி இருந்தார்.

விக்ரம் லால் நிறுவனத்தில் இணைந்த பிறகு இந்நிறுவனமே பெரிய மாற்றம் கண்டது. 1986 ஆம் ஆண்டில் Eicher Motors நிறுவனம் கமர்சியல் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்ய தொடங்கியது. பின்னர் படிப்படியாக கனரக வாகனங்களையும் உற்பத்தி செய்து இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. தற்போது வாகனங்கள் விற்பனை துறையில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது.

குறிப்பாக Eicher Motors நிறுவனத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அவர்களின் ராயல் என்பீல்டு பைக்குகள் தான். ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டுவதையே இளைஞர்கள் பெருமையாக கருதும் வகையில் மக்கள் மனதில் நிலை நிறுத்து செய்துள்ளார் விக்ரம் லால்.

விக்ரம் லால் அவர்களின் மனைவி அனிதா லாலும் ஒரு தொழில் முனைவோர் ஆவார். இவர் குட் எர்த் என்ற பெயரில் ஒரு ஆடம்பர வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வரக்கூடிய நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தம்பதியின் மகள் சிம்ரன் லால், குட் எர்த் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார் . அதேபோல நிக்கோ பார் என்ற ஒரு லைப் ஸ்டைல் பிராண்டையும் அவர் உருவாக்கியிருக்கிறார்.

இவர்களது மகனான சித்தார்த் லால் Eicher Motors நிறுவனத்தில் தற்போது முக்கியமான பொறுப்பினை வகித்து வருகிறார். குறிப்பாக ராயல் என்ஃபீல்ட் விற்பனையை அதிகரித்ததில் இவரது பங்கு முக்கியமானது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் சித்தார்த்தின் தலைமையில் 8 லட்சம் ராயல் என்பீல்டு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தற்போது விக்ரம் லால் அவர்களின் சொத்து மதிப்பு 68,442 கோடி ஆகும். இவர்களின் Eicher Motors நிறுவனத்தின் மதிப்பு சுமார் 1,00,000 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் விக்ரம் லால் இந்திய பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+