பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த புகழ்பெற்ற உணவகமான தி ராமேஸ்வரம் கஃபே கோயில் பிரசாதங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு உணவினை தங்களது மெனுவில் சேர்த்துள்ளது. தென்னிந்திய உணவு வகைகளை அதன் சுவை மாறாமல் விற்பனை செய்வதில் புகழ்பெற்றிருக்கிறது பெங்களூருவில் செயல்பட்டு வரக்கூடிய ராமேஸ்வரம் கஃபே. இந்த உணவகத்தில் அவ்வப்போது புதுப்புது உணவு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நமது கோயில்களில் பாரம்பரியமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் ஒரு உணவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமேஸ்வரம் கஃபே உணவகத்தின் தலைவர், தென்னிந்திய கோயில்களில் பஞ்சாமிர்தம் என்பது மிகவும் புகழ் பெற்றது. கோயில்களுக்கு செல்பவர்கள் இந்த பஞ்சாமிர்த பிரசாதங்களை வாங்கி ருசிக்காமல் வரமாட்டார்கள். கோயில்களில் கடவுளுக்கு காணிக்கையாக பஞ்சாமிர்தம் படைக்கப்படுகிறது. எங்களது உணவகம் எங்களுக்கு கோவில் இங்கே வரக்கூடிய வாடிக்கையாளர்தான் எங்களுக்கு கடவுள் எனவே அவர்களுக்கு நாங்கள் பஞ்சாமிர்தத்தை வழங்குகிறோம் எனக் கூறினார்.

ஒரு கிண்ணம் பஞ்சாமிர்தத்தின் விலை 100 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் இரவு 7 மணிக்கு பிறகு இந்த பஞ்சாமிர்தம் கிடைக்கும் என ராமேஸ்வரம் கஃபே தெரிவித்துள்ளது. பால், தயிர், சர்க்கரை, தேன், நெய் ஆகியவை சமமான அளவில் சேர்க்கப்பட்டு அத்துடன் வாழைப்பழம் மற்றும் பிற பல வகைகள் சேர்க்கப்பட்டு செய்யப்படுவது தான் பஞ்சாமிர்தம்.
இயற்கையான முறையில் விளைந்த பொருட்களை மட்டுமே இதில் பயன்படுத்துவதாகவும் எந்த ஒரு செயற்கையான நிறமிகளோ அல்லது சுவையூட்டிகளோ இதில் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும் தினம்தோறும் இந்த பஞ்சாமிர்தமானது தயார் செய்யப்பட்டு விற்கப்படுகிறது , இதனை நாங்கள் தயாரித்து சேமித்து வைத்து விற்பனை செய்வது கிடையாது எனக் கூறுகின்றனர்.
வாடிக்கையாளர்களுக்கு அன்றைய தினம் தயாரித்த புதிய பஞ்சாமிர்தம் மட்டுமே உணவாக வழங்கப்படுகிறது எனக் கூறுகின்றனர். ராமேஸ்வரம் கஃபே நிறுவனத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பஞ்சாமிர்த உணவு குறித்து சமூக வலைதளங்களிலும் பலர் கருத்திட்டு வருகின்றனர். குறிப்பாக கோயில் பிரசாதம் என்றால் அதை ஏன் வாடிக்கையாளர்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்கிறீர்கள் என ஒரு சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு சிலர் இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் புகழ்பெற்ற ஒரு உணவகமாக செயல்பட்டு வருகிறது தி ராமேஸ்வரம் கஃபே. சில மாதங்களுக்கு முன்பு இந்த உணவகத்தில் வெடி வெடி விபத்து நிகழ்ந்தது. அண்மையில் கூட இந்த நிறுவனம் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண உணவு விருந்தில் உணவு சமைத்து பரிமாறியது .
Story written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications