இதை நம்பி யாரும் வீடு வாங்காதீங்க.. உண்மையை உடைக்கும் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்..!!

இந்தியர்கள் வீடு வாங்குவதை பாதுகாப்பான முதலீடு, மன நிம்மதி தரும் சொத்து, நிலையான எதிர்காலம் என கருதுகின்றனர். மேலும், இது வாழ்க்கையின் முக்கிய அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், இதில் அதிக சிக்கல்கள் இருப்பதாகவும், இந்தியர்கள் வீடு வாங்குவதில் காட்டும் ஆர்வம் நிதி அடிப்படையில் தவறானது என்றும் சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ரியல் எஸ்டேட் என்பது ஒரு மாயை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஒரு வீட்டில் முதலீடு செய்தால், அதில் இருந்து வரும் வாடகை வருமானம் ஆண்டுக்கு 2% முதல் 3% மட்டுமே இருக்கும். உதாரணமாக, ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு என்றால், ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் மட்டுமே வாடகை கிடைக்கும். இது சாதாரண சேமிப்பு கணக்குகளில் கிடைக்கும் வட்டியை விட குறைவாகவே உள்ளதாக ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதை நம்பி யாரும் வீடு வாங்காதீங்க.. உண்மையை உடைக்கும் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்..!!

உங்கள் முழு முதலீட்டை வாடகை மூலம் திரும்பப் பெற 35 முதல் 50 ஆண்டுகள் வரை கூட ஆகும். வீட்டின் விலை உயர்ந்தாலும், வாடகை வருமானம் அதிகரிக்காமல் இருக்கும். இதனால், முதலீடாக வீடு வாங்குவது குறைவான வருமானத்தை மட்டுமே தரும் என்று அவர் விளக்கியுள்ளார். இந்த சிக்கல்கள் எல்லாம் இருந்தாலும், பெரும்பாலான இந்தியர்கள் இன்னும் வீடுகளில் தான் பணத்தை முதலீடு செய்கின்றனர். ஏனென்றால், விலை உயரும் என அவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இது நிதி அடிப்படையில் மிக அபாயமான சூதாட்டம் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரித்துள்ளார்.

"2000களில் வீட்டு விலைகள் மிக வேகமாக உயர்ந்தது உண்மைதான். ஆனால், அதன் பிறகு பல நகரங்களில் விலை நிலைத்துவிட்டது. பணவீக்கத்தை கணக்கில் எடுத்தால் உண்மையில் குறைந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார். ஸ்டாம்ப் டியூட்டி, பதிவு கட்டணம், பரிவர்த்தனை துறைமுகக் கட்டணம் உள்ளிட்ட செலவுகள் ஒரு வீட்டின் மதிப்பு 6% முதல் 10% வரை கூடும். அதாவது, ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு என்றால், மேற்கண்ட செலவுகள் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆகும். அப்படி பார்த்தால், உங்கள் மொத்த முதலீடு ரூ.1.06 கோடி முதல் ரூ.1.10 கோடி வரை இருக்கும். இது வாடகை மூலம் வசூலிக்க அதிக காலம் எடுக்கிறது.

ரியல் எஸ்டேட் என்பது வாங்குவதற்கு எளிதாக இருந்தாலும், அதை விற்பது சிக்கல் ஆனது. சில வாரங்கள் முதல் சில மாதங்கள் கூட ஆகலாம். சில சமயங்களில், வருடங்கள் போனாலும் விற்க முடியாது. மேலும், சிலர் ஆபத்துள்ள சொத்தில் லட்சங்கள் முதல் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்கிறார்கள். ஆனால், அந்த சந்தை வீழ்ந்தால், உங்கள் சொத்தும் அதன் மதிப்பும் வீழ்ந்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.

அதேபோல், இந்தியர்கள் அதிக அபாயம் உள்ள மற்றும் குறைந்த வருமானம் கொண்ட சொத்துக்களில் ஏன் முதலீடு செய்கிறார்கள் என்பதையும் அவர் விளக்கியுள்ளார். அதாவது, வீடு வாங்குவது லாபம் தரும் என பொதுவான நம்பிக்கையாக உள்ளது. அதேபோல், வீட்டு கடன்களுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கிறது. மேலும், கணக்கில் காட்ட முடியாதை பணத்தை சொத்துக்களில் முதலீடு செய்வது, எல்லோருமே வீடு வாங்குறாங்க.. நம்மளும் வாங்கணும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளதால், பலரும் நிதி கணக்குகளை பார்க்காமல் வீடுகளில் முதலீடு செய்கின்றனர். வீட்டின் விலை உயரும் என்ற நம்பிக்கை இருக்கலாம்.. ஆனால் அது உறுதியாக சொல்லிவிட முடியாது என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+