கடன் பெறுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் ஒரு முக்கியமான மாற்றத்தை ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. அதில், சிறு குறு நிறுவனங்களுக்கான வங்கிக் கடன்களையும், முன்கூட்டியே செலுத்தும்போது விதிக்கப்படும் அபராத கட்டணங்களை நீக்கமாறு ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள கடிதத்தில், வணிகப் பொருட்களுக்காக எடுத்த கடன்களையும் சேர்த்து, முன்கூட்டியே செலுத்திய முறையில் நிலுவைக் கட்டணங்கள் மற்றும் முன்பணம் செலுத்தும் தண்டனைகளை நீக்க பரிந்துரைத்துள்ளது. இது தனிநபர்கள் மற்றும் குறு மற்றும் சிறிய நிறுவனங்கள் (MSE) ஆகியோருக்கு நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் கடன் பெறுவோருக்கு கூடுதலான நிதி பரிந்துரைகளின்றி கடன்களை திரும்ப செலுத்துவது எளிதாகும்.

மாறுபட்ட வட்டி விகிதங்களைக் கொண்ட கடன் திட்டங்களுக்கு மட்டுமே, இந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. தனி நபர் மற்றும் சிறு, குறு நிறுவனங்களின் வணிக தேவைகளுக்காக வழங்கப்படும் கடன்களுக்கு, முதற்கட்ட இரண்டாம் கட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிளைத் தவிர, பிற வங்கிகள் இந்த வசதியை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்கூட்டியே கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு, காலக்கெடு தொடர்பான நிபந்தனைகள் எதுவும் விதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MSE கடன் வாங்குபவர்களைப் பொறுத்தவரை, புதிய வழிமுறையானது ஒரு கடனாளிக்கான மொத்தம் அனுமதிக்கப்பட்ட வரம்பு ரூ.7.50 கோடி வரை பொருந்தும். அதை தாண்டிய தொகைக்கு முன்கூட்டியே அடைக்கும்போது அல்லது கடனின் ஒருபகுதி தொகையை முன்கூட்டியே மொத்தமாக செலுத்தும் போது அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் மதிப்பாய்வுகள், MSEகளுக்கு வழங்கப்பட்ட கடன்களில் முன்கூட்டியே செலுத்திய கட்டணங்கள்/ தண்டனைகள் விதிப்பதற்கு உரிய ஒழுங்குமுறை செய்யப்பட்ட நிறுவனங்களில் (REs) வேறுபட்ட நடைமுறைகள் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது, இது, வாடிக்கையாளரிடையே குறைகள் மாற்றும் சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக வாடிக்கையாளர்களிடமிருந்தும் புகார்கள் வரத் துவங்கியதை அடுத்து, ரிசர்வ் வங்கி இந்த வரைவு முன்வடிவை வெளியிட்டு உள்ளது.
மேலும், சில கடன் ஒப்பந்தங்களில், கடன் வாங்குபவர்கள், குறைந்த வட்டி விகிதங்களைப் பெறுவதற்காகவோ அல்லது சிறந்த சேவை விதிமுறைகளைப் பெறுவதற்காகவோ, வேறொரு கடன் வழங்குநரிடம் மாறுவதைத் தடுக்க, சில கட்டுப்பாடுகள் கொண்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், இந்த முன்மொழிவு தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில், இது குறித்து மார்ச் 21, 2025 க்குள் பங்குதாரர்களிடமிருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications