அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் வளர்ந்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறையின் மத்தியில், இந்திய பங்கு சந்தையில் இருந்து பங்குகளை விற்று வெளியேறி வருகின்றது.
இந்த நிலையில் அன்னிய செலவாணியை அதிகரிக்க ரிசர்வ் வங்கி தற்காலிகமாக நடவடிக்கை எடுத்துள்ளது.
டிசம்பர் 31, 2022 வரையில் தானியங்கி வழியின் கீழ் வெளி வணிக கடன் (ECB) வரம்பை, 1.5 பில்லியனாக இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.
வணிக நோக்கங்களுக்கான கடன்
ECB என்பது இந்தியாவில் வணிக நோக்கங்களுக்காக தகுதியான நிறுவனங்கள் பெறும் வெளி நாட்டு கடன் ஆகும். இது தற்போது750 மில்லியன் டாலர் என்ற லெவலில் உள்ளது. இதனை 1.5 பில்லியன் டாலர் வரையில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தனது வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
இன்னும் சில சலுகைகள்
அதேபோல இசிபி கட்டமைப்பின் கீழ் அனைத்து செலவு உச்சவரம்பும் 100 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தப்படுகிறது. இந்த சலுகையானது கடன் வாங்குபவரின் கடன் முதலீட்டு தர மதிப்பீட்டின் அடிப்படையில் டிசம்பர் 31, 2022 வரையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கடன்கள், ப்ளோட்டிங்/பிக்சட் ரேட் நோட்டுகள்/ பத்திரங்கள்/ கடனீட்டு பத்திரங்கள், மூன்று ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட வர்த்தக வரவுகள், வெளி நாட்டு நாணய மாற்றதக்க பத்திரங்கள், (FCCBs), வெளி நாட்டு நாணய மாற்றுப் பத்திரங்கள் (FCEBs), பைனான்ஷியல் லீஸ் என பலவும் ஆர்பிஐ- ஆல் அனுமதிக்கப்படும் ECB-ன் வடிவங்களாகும்.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
மொத்தத்தில் நிறுவனங்கள் மத்தியில் நிதி புழக்கத்தினை அதிகரிக்க, ரிசர்வ் வங்கியின் இந்த திட்டமானது உதவும். இதன் காரணமாக நிறுவனங்கள் போதுமான நிதியினை பெற இது வழிவகுக்கும். இது மேற்கொண்டு நிறுவனத்தின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம்.
அன்னிய செலவாணி அதிகரிக்கலாம்
இதன் மூலம் நாட்டின் அன்னிய செலவாணியும் அதிகரிக்கும். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அன்னிய செலவாணி குறைந்து வந்த நிலையில் வந்துள்ளது. இது ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவினைக் காணவும் வழிவகுத்தது. ஆக ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அன்னிய செலவாணி விகிதமும் அதிகரிக்கும். நிறுவனங்களுக்கும் -பயனுள்ளதாக இருக்கும். இவ்விரு காரணிகளுக்கு மத்தியில் ரூபாயின் மதிப்பும் சற்று சரியாமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications