இந்தியாவில் மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே ஸ்டார்ட்அப் எகோசிஸ்டம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் மிகையில்லை. இந்தியாவில் உருவான ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உலக நாடுகளில் வர்த்தகம் செய்வதை தாண்டி தற்போது உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுடன் நேருக்கு நேர் போட்டி போடும் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதனால் வாயிலாகவே இந்திய நிறுவனங்களை தேடி தேடி முதலீடு செய்யத் துடிக்கிறது பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள். இந்த அதிரடி வளர்ச்சியின் வாயிலாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இருந்து தற்போது பல பில்லியனர்கள் உருவாகியுள்ளனர்.
இந்த வகையில் ஹூரன் ரிச் லிஸ்ட்-ல் இடம்பெற்ற டாப் 10 ஸ்டார்ட்அப் பில்லியனர்களை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
முதல் இடம்
நாட்டின் முன்னணி டிஜிட்டல் சேவை நிறுவனமான பேடிஎம் கடந்த 5 வருடத்தில் வர்த்தக ரீதியிலும், வருவாய் ரீதியிலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த வகையில் 2020 ஹூரன் ரிச் லிஸ்ட் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனரான விஜய் சேகர் சர்மா தான்.
சுமார் 23,000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஸ்டார்ட்அப் பில்லியனர் பட்டியலில் முதல் இடத்தையும் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 44வது இடத்தையும் பிடித்துள்ளார்.
2வது இடம்
இந்த லாக்டவுன் காலத்தில் கல்வி துறையை புரட்டிப் போடும் அளவிற்கு மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்கள் வளர்ச்சியை அடைந்த பைஜூஸ் நிறுவனத்தின் தலைவர் பைஜூ ரவீந்திரன் மற்றும் குடும்பத்தின் சொத்து மதிப்பு 20,400 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்து ஸ்டார்ட்அப் பில்லியனர் பட்டியலில் 2வது இடத்தையும் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 52வது இடத்தையும் பிடித்துள்ளார்.
3வது இடம்
பங்குவர்த்தக நிறுவனமான Zerodha-வின் நிறுவனரான நித்தின் காமத் மற்றும் குடும்பத்தின் சொத்து மதிப்பு 16,900 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நித்தின் ஸ்டார்ட்அப் பில்லியனர் பட்டியலில் 3வது இடத்தையும் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 64வது இடத்தையும் பிடித்துள்ளார்.
4வது இடம்
வேலைவாய்ப்பு தேடுதல் தளமான நாக்ரி நிறுவனத்தின் தாய் நிறுவனமான இன்போ எட்ஜ் நிறுவனத்தின் தலைவர் Sanjeev Bikhchandani-யின் சொத்து மதிப்பு 2020ஆம் ஆண்டில் 15,200 கோடி ரூபாய் வரையில் உயர்ந்து இந்திய ஸ்டார்ட்அப் பில்லியனர் பட்டியலில் 4வது இடத்தையும் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 74வது இடத்தையும் பிடித்துள்ளார்.
5வது இடம்
மீடியா.நெட் எனப்படும் முன்னணி டிஜிட்டல் விளம்பர நிறுவனத்தின் Divyank Turakhia-வின் சொத்து மதிப்பு 2020ல் 14,000 கோடி ரூபாயாக உயர்ந்து இந்திய ஸ்டார்ட்அப் பில்லியனர் பட்டியலில் 5வது இடத்தையும் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 78வது இடத்தையும் பிடித்துள்ளார்.
உதான்
உதான் நிறுவனத்தின் நிறுவனர்களான அமோத் மால்வியா, சுஜித் குமார், வைபவ் குப்தா ஆகியோர் தலா 13,100 கோடி ரூபாய் அளவிலான சொத்து மதிப்புடன் இந்திய ஸ்டார்ட்அப் பில்லியனர் பட்டியலில் 6வது இடத்தையும், இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 88வது இடத்தையும் பகிர்ந்துள்ளனர்.
சோகோ
இதேபோல் இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் ஸ்டார்ட்ப் துறையைச் சார்ந்து இடம்பெற்றுள்ள கடைசி நபர் ராதா வேம்பு, 2020ல் இவரது சொத்து மதிப்பு 12,000 கோடி ரூபாய் அளவில் உயர்ந்து இந்திய ஸ்டார்ட்அப் பில்லியனர் பட்டியலில் 9வது இடத்தையும், இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 99வது இடத்தையும் பிடித்துள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications