இந்திய மக்களுக்கு மண்ணும் பொன்னும் எப்போதுமே பெரிய விருப்ப முதலீடாகவும், வாழ்க்கை லட்சியமாகவும் இருந்தது, இருக்கிறது. ஆனால் காலம் பல மாற்றங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர வேண்டிய முக்கியமான நேரம் இது.
சமானிய மக்களுக்கு இன்று மிக முக்கியக் கனவாகவும், வாழ்க்கை லட்சியமாகவும் இருப்பது கார். இதற்குப் பல காரணங்கள் உண்டு, குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் விரும்பி வாங்கும் மிகமுக்கிய சொத்தாகவும் விளங்குகிறது கார்.
இந்த முக்கியக் கனவை நினைவாக்க இதுதான் சரியான நேரம் என்பதற்குப் பல காரணங்கள் உண்டு.
சொந்த கார்
இன்று கார் வாங்குவது என்பது கார் லோன் மூலம் மிகவும் எளிதான ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாகக் கொரோனா தொற்று ஏற்பட்ட பின்பு தற்போது வங்கிகளில் அளிக்கப்படும் கார் லோன் மீதான வட்டி விகிதம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இது பலரைப் புதிதாகக் கார் வாங்க தூண்டியுள்ளது.
7 வருட கடன்
இதுமட்டும் காரணமில்லை, இந்திய வங்கிகள் பொதுவாகக் கார் லோன்-ஐ 3 முதல் 5 வருடங்களுக்கு மட்டுமே கொடுப்பது வழக்கம். ஆனால் தற்போது வங்கியின் நிதிநிலையின் காரணமாக அதிகப்படியாக 7 வருடம் காலம் வரையில் கார் லோன் அளிக்கப்படுகிறது. இதனால் கார் கடனுக்கான ஈஎம்ஐ தொகை பெரிய அளவில் குறைந்துள்ளதும் முக்கியக் காரணமாக விளங்குகிறது.
முக்கியக் காரணி
இதேவேளையில் கார், வீடு அல்லது தங்கத்தைப் போன்று அல்லாமல் தொடர்ந்து தனது மதிப்பை இழக்கக் கூடியது. இத்தகைய சூழ்நிலையில் நீண்ட காலம் கடன் வாங்கும் போது அதிக அளவிலான வட்டியைச் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
அதிகப்படியான கடன்
மேலும் தற்போது பல வங்கிகள் காரின் எக்ஸ்-ஷோரும் விலையை மொத்தமாகக் கார் லோன் ஆகக் கொடுக்கிறது. மற்ற வங்கிகள் 80 சதவீதம் வரையிலான தொகைக்குக் கார் லோன் அளிக்கிறது. இந்நிலையில் எந்த வங்கி எவ்வளவு வட்டியில் கார் லோன் அளிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
வட்டி விகிதம்
சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா - 6.85 - 7.80 சதவீதம்
பாங்க் ஆ பரோடா - 7.10 முதல் 10.10 சதவீதம்
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி - 7.10 முதல் 7.90 சதவீதம்
யூனியன் பாங்க் ஆப் இந்தியா - 7.15 முதல் 7.50 சதவீதம்
ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி - 7.20 முதல் 8.70 சதவீதம்
பாங்க் ஆப் மகாராஷ்டிரா - 7.30 முதல் 8.80 சதவீதம்
கனரா வங்கி - 7.30 முதல் 9.90 சதவீதம்
பஞ்சாப் நேஷனல் வங்கி - 7.30 முதல் 7.80 சதவீதம்
பாங்க் ஆப் இந்தியா - 7.35 முதல் 8.05 சதவீதம்
ஐடிபிஐ வங்கி - 7.50 முதல் 8.10 சதவீதம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 7.55 சதவீதம்
இந்தியன் வங்கி - 7.65 முதல் 8.15 சதவீதம்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - 7.70 முதல் 11.20 சதவீதம்
யூகோ வங்கி - 7.70 சதவீதம்
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications