தமிழ்நாட்டில், தொழில்முனைவோர் மேம்பாட்டுக்காக அரசு வழங்கும் மானியங்களைப் பெறுவதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பங்கு குறைவாக இருப்பதைக் கடந்த ஆண்டு கண்டறிந்தது தமிழ்நாடு அரசு.
இதனைச் சரிசெய்யும் நோக்கில், அண்ணல் அம்பேத்கர் பிஸ்னஸ் சாம்பியன் திட்டத்தை (Annal Ambedkar Business Champions Scheme - AABCS) தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது.

அண்ணல் அம்பேத்கர் தொழில் சாம்பியன் திட்டம்: இந்த திட்டத்தின் கீழ், தகுதியான திட்ட செலவுகள் அதாவது பிராஜெட்-க்கு தேவையான முதலீட்டு தொகை 1.5 கோடி ரூபாய்க்கு மிகாது இருக்கும் போதும், இதற்கு 35% மானியத்தைத் தமிழ்நாடு அரசு வழங்குகிறது. மேலும், 10 ஆண்டுகள் வரையிலான கடனுக்கான வட்டி மானியமாக 6% வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற கல்வித் தகுதி தேவையில்லை. பிற்படுத்த மக்களின் முன்னேற்றத்தின் மீது தமிழ்நாட்டின் திராவிட கட்சி காலம் காலமாக செய்து வருகிறது.
இந்த முயற்சியில் ஒரு படிக்கு மேல் சென்று திமுக அரசு அண்ணல் அம்பேத்கர் பிஸ்னஸ் சாம்பியன் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்தவர் இளம் தலைமுறையினரை முதலாளியாக்கி வருகிறது.
ஆதிதிராவிடர் & பழங்குடியின தொழில்முனைவோர் அதிகரிப்பு: கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், இதுவரை 134.86 கோடி ரூபாய் மதிப்பிலான மானியங்கள் 1,303 ஆதிதிராவிடர் & பழங்குடியின தொழில்முனைவோருக்குத் தமிழ்நாடு அரசு வழங்கப்பட்டுள்ளது.
இதில், 288 பெண் தொழில்முனைவோர் ₹33.09 கோடி மதிப்பிலான மானியங்களைப் பெற்றுள்ளனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி.க. அமுதவள்ளி: தனது தொழிலுக்கான கடனுதவி கேட்டு மாவட்ட தொழில் மையத்தை (District Industries Center - DIC) அணுகினார் அமுதவள்ளி.
அவரது தகுதியை மதிப்பீடு செய்த டி.ஐ.சி., இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை (INDIAN OVERSEAS BANK) அணுகுமாறு பரிந்துரை செய்தது. அதன் பேரில், 9.87 லட்சம் ரூபாய் கடன் பெற்றார் அமுதவள்ளி, துணி வகை வியாபாரம் மூலம் ₹8 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார் என லின்கிடுஇன் தளத்தில் Governance TamilNadu என்ற கணக்கில் பதிவிடப்பட்டு உள்ளது.
இது போன்ற திட்டங்கள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் தொழில்முனைவோராக உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் மூலம், பொருளாதார வளர்ச்சியும், சமூக நீதியும் மேம்படும், பொருளாதாரத்தில் இருக்கும் வித்தியாசம் அதிகளவில் குறையும்.
திராவிட மாடல் ஆட்சி என்ன செய்துவிடும் என கேட்பவர்களுக்கு இது தான் பதில்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications