சமீபத்தில் ஒரு சம்பவம், நவீன இளைஞர்களின் வாழ்க்கை இலக்குகள் மற்றும் தொழில்முறை கனவுகள் குறித்த ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது. நியூயார்க்கில் உள்ள கூகிள் நிறுவனத்தில், ஆண்டுக்கு சுமார் ரூ.2.52 கோடி (300,000 டாலர்) சம்பளத்துடன் ஒரு கனவு வேலையில் இருந்த ஜிம் டாங் என்ற 27 வயது இளைஞன், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு டிஜிட்டல் நாடோடியாக (Digital Nomad) சுதந்திரமான வாழ்க்கையைத் தொடர முடிவு செய்துள்ளார்.
பிசினஸ் இன்சைடர் செய்தி நிறுவனத்துடன் அவர் பகிர்ந்து கொண்ட ஒரு கட்டுரையில், ஜிம் டாங் தனது பயணத்தை விவரித்துள்ளார். அவர் 2021-ஆம் ஆண்டு கூகிளில் சேர்ந்தபோது, அது தனது பெற்றோருக்குப் பெருமை சேர்க்கும் என்றும், தனது நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என்றும் நம்பினார். என் பெற்றோரை அலுவலகத்திற்கு அழைத்து வந்து அமெரிக்க கனவை அடைந்துவிட்டதாக உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

அதிக சம்பளம் மற்றும் பல சலுகைகள் இருந்தபோதிலும், அவரது மனதிற்குள் ஒரு வெறுமை உணர்வு தோன்றத் தொடங்கியது. பல சலுகைகள் இருந்தாலும், புத்திசாலித்தனமான நண்பர்களுடன் வேலை செய்தாலும், நான் ஒருபோதும் இந்த கார்ப்பரேட் வேலையை விரும்பியதில்லை என்று அவர் கூறினார். கூகுளின் விளம்பரங்களுக்கான தயாரிப்புகளில் நான் வேலை செய்தபோது, நிறுவனத்திற்கு நிறைய பணம் சம்பாதிக்க உதவியிருக்கலாம். ஆனால் அது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த அர்த்தத்தையும் தரவில்லை என்று அவர் மனம் திறந்து பேசினார்.
சில காலம், ஜிம் டாங், FIRE (Financial Independence, Retire Early) என்ற இயக்கத்தின்படி, 5 மில்லியன் டாலர்களைச் சேமித்து, தனது 40 வயதிற்குள் ஓய்வு பெறலாம் என்ற நம்பிக்கையில் உழைத்தார். பதவி உயர்வுகளுக்காக கடுமையாக உழைத்தார். ஆனால், ஒரு தனிப்பட்ட உறவு முறிவு, அவரது மனச்சோர்வை மேலும் அதிகப்படுத்தியது. அதன் பிறகு, அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினார். அதன் விளைவாக, மே 2025-ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்த பிறகு, ஜிம் டாங் டோக்கியோவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். ஆசியா முழுவதும் பயணம் செய்து, ஒரு படைப்பாளியாகவும், தொழில்முனைவோராகவும் வாழ்க்கையை ஆராய்ந்து வருகிறார். இப்போது அவர் டிஜிட்டல் தயாரிப்புகளை உருவாக்குகிறார், தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கிறார், மேலும் தனது கார்ப்பரேட் வாழ்க்கையிலிருந்து வெளியேறிய பயணத்தை சமூக ஊடகங்களில் ஆவணப்படுத்துகிறார். அவரது வருமானம் நிலையற்றதாக இருந்தாலும், கூகிளில் அவர் சேர்த்த நிதி, அவருக்கு ஒரு பாதுகாப்பை வழங்குகிறது.
ஜிம் டாங் தனது வாழ்க்கையில் கண்ட மிகப்பெரிய மாற்றம், வெற்றியைப் பற்றிய அவரது வரையறையே என்று குறிப்பிட்டார். வெற்றியை நான் முன்பு அங்கீகாரம் மற்றும் பாராட்டை அடிப்படையாகக் கொண்டு பார்த்தேன். ஆனால் இப்போது, உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் திருப்தியாக உணர்ந்தால், அதுவே உண்மையான வெற்றி என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.
பணம், பதவி, புகழ் என அனைத்தும் இருந்தாலும், மன நிறைவு இல்லாத வாழ்க்கை என்பது ஒரு கூண்டுக்குள் அடைபட்ட வாழ்க்கை என்பதை ஜிம் டாங் உணர்ந்துள்ளார். அவரது கதை, பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணற்ற இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவும், அவர்களின் வாழ்க்கைப் பாதையை மறுபரிசீலனை செய்வதற்கான தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications