அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. அந்நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை காட்டிலும் மந்தமாக இருப்பது, பணவீக்கம் அதிகரிக்கும் என்ற கவலை போன்றவற்றால் பங்குச் சந்தைகள் வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. குறிப்பாக, S&P BSE 500 மற்றும் DOW jones industrial average இன்டெக்ஸ்கள் தலா 1.7 சதவீதம் வீழ்ச்சி கண்டன. இது 2023 டிசம்பர் 18ம் தேதிக்கு பிறகான காலத்தில் ஒரு நாள் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும். மேலும், இது இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் மிகவும் மோசமான வீழ்ச்சியாகும்.
எஸ் அண்ட் பி குளோபல் வெளியிட்ட அறிக்கையில், அரசாங்கத்தின் இறக்குமதி வரி கொள்கையால் ஏற்பட்ட நிலையற்ற தன்மையால் அமெரிக்க வர்த்தக நடவடிக்கைகள் 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு பிப்ரவரியில் சரிவடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், உயர்ந்து வரும் பொருட்களின் விலைகளுக்கு மத்தியில் நுகர்வோரின் உணர்வு மோசமடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸின் தலைமை வணிக பொருளாதார நிபுணர் கிறிஸ் வில்லியம்சன் கூறுகையில், உள்நாட்டு செலவின குறைப்புகள் முதல் கட்டணங்கள் அதிகரிப்பு, புவிசார் முன்னேற்றங்கள் வரையிலான விஷயங்களில் அரசாங்கத்தின் கொள்கை நிலைபபாடுகளின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள எதிர்மறையான விளைவுகள் குறித்து நிறுவனங்கள் தங்களது கவலையை தெரிவித்தன.

நிச்சயமற்ற தன்மையால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிக்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்பட்டதால் சப்ளையர்கள் பொருட்களின் விலைகளை உயர்த்தி விட்டனர் இதற்கு மத்தியில் விலைகள் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது என தெரிவித்தார். டிரம்பின் வரி விதிப்பால் பொருட்களின் விலை உயரும், பணவீக்கம் அதிகரிக்கும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு அதிபராக பங்கேற்றார்.
அதிபராக பதவியேற்ற சில நாட்களிலேயே டொனால்ட் டிரம்ப், சீனா, கனடா,மெக்சிக்கோ நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். அமெரிக்காவின் நலனுக்காக இதை செய்வதாக தெரிவித்தார். ஆனால் டிரம்பின் இந்த நடவடிக்கை அந்நாட்டுக்கே எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருவதை தற்போது வெளிவந்துள்ள தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. டிரம்ப் வந்தால் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி விடுவார் என்ற நம்பிக்கையில் அவரை அந்நாட்டு மக்கள் அரியணையில் அமர வைத்தனர். ஆனால் நிலைமையோ அதற்கு எதிர்மாறாக உள்ளது.
Story written:subramanian
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications