ஃபரிதாபத்தைச் சேர்ந்த சந்தீப் மால் என்பவர் 12 பேர் கொண்ட கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். இவருடைய வீடு 10,000-த்திற்க்கும் அதிகமான சதுரடியில் பிரம்மாண்டமாக உள்ளது. அப்படி இருக்கையில் கோடை காலம் வந்துவிட்டால் ஒவ்வொருவரும் தங்களுடைய ரூமில் ஃபேன், ஏசி போன்றவற்றை பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் ஒவ்வொரு கோடை மாதத்திலும் சந்தீப் மாலுக்கு ரூ. 50,000-த்தில் இருந்து 60,000 ரூபாய் வரை மின்சாரக் கட்டணம் வந்துள்ளது.
இதற்கு எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்த சந்தீப் மால் தனது வீட்டின் மேற் கூரையில் சோலார் பேனல்களை நிறுவியுள்ளார். தற்போது யாரும் நினைத்து கூட பார்க்காத முடியாத அளவுக்கு தன்னுடைய எலக்ட்ரிசிட்டி பில்லை குறைத்திருக்கிறார். அதோடு இதை வைத்தே பணமும் சம்பாதித்து வருகிறார். சந்தீப் மால் அப்படி என்ன செய்தார்?, சோலார் பேனல்களை வைத்ததால் அவருக்கு எவ்வளவு பணம் மிச்சமானது?, எப்படி இதை வைத்து பணம் சம்பாதிக்கிறார்? என்ற பல்வேறு கேள்விகளுக்கும் இந்தப் பதிவில் விடையைப் பார்ப்போம்.

ஒவ்வொரு கோடை காலத்திலும் தனக்கு அதிகமாக எலக்ட்ரிசிட்டி பில் வருகிறது என்பதை தெரிந்த சந்தீப் 2020-ஆம் ஆண்டில் இந்த நிலையை மாற்ற முடிவு செய்தார். முதலில் 10 கிலோ வாட் எலக்ட்ரிசிட்டி வழங்கும் சோலார் பேனல்களை நிறுவினார். இந்த அமைப்பு சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது. சோதனை முயற்சியாக இதை சந்தீப் செய்தார். சூரிய ஒளி மின்சாரம் தனது வீட்டுக்கு எப்படி பலனளிக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள விரும்பினார்.
ஹரியானா மாநிலத்தில் நெட் மீட்டரிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. நெட் மீட்டரிங் சிஸ்டம் என்றால் ஒரு வீட்டில் சோலார் பேனல்களை வைத்து சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டில் தேவைக்கேற்ப அவர்கள் அந்த மின்சாரத்தை பயன்படுத்தலாம். அதுபோக மீதமுள்ள மின்சாரத்தை அரசுக்கு விற்பனை செய்ய முடியும். இதற்காக வீடுகளில் பை டைரக்ஷனல் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கும்.
இதன் மூலம் தற்போது தனது வீட்டுக்கும் மின்சாரத்தை எடுத்துக்கொண்டு மீதம் உள்ள மின்சாரத்தை விற்பனை செய்து வருகிறார். சோலார் பேனல்களின் மூலம் அவரது வீட்டில் மின்சாரம் உற்பத்தியாக தொடங்கியது. சில நேரங்களில் வீட்டு தேவைக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தியானது. இதனால் நெட் மீட்டரிங் மூலம் மின்சாரத்தை விற்க தொடங்கினார்.
அவரது வீடு மின்சார ஒளியை பயன்படுத்தும் இடமாக மட்டுமல்லாமல், சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை எடுத்து விற்பனை செய்யும் இடமாகவும் மாறியது. இதனால் அவருடைய மின் கட்டணம் வெகுவாக குறைந்தது. அதிலிருந்து ஊக்கமடைந்த சந்தீப் தனது சோலார் பேனலில் அமைப்பை 25 கிலோவாட்டாக மேம்படுத்தியுள்ளார்.
சூரிய ஒளியைப் பயன்படுத்தியதால் சந்தீப்பின் மின்சாரக் கட்டணம் வெகுவாக குறைந்தது. 2024-ஆம் ஆண்டின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 12.69 ரூபாய் தான் மின்சார கட்டணமாக செலுத்தினார். இதனால் ஒரு வருடத்திற்கு ரூ.3 முதல் ரூ.4 லட்சம் அவருக்கு மிச்சமாகிறது. அதற்காக சோலார் பேனல்களை அமைக்க சந்தீப்புக்கு ரூ. 12 முதல் ரூ. 13 லட்சம் வரை முதலீடு தேவைப்பட்டது. ஆனால் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் மின்சார கட்டண சேமிப்பின் மூலம் இந்த தொகையையும் திரும்ப பெறலாம். அதோடு மின்சார விற்பனை சந்தீப்புக்கு புதிய வணிகமாகவும் அமைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications