பணம் சம்பாதித்து அதனை வெறுமனே அக்கவுண்டில் வைத்திருக்கக் கூடாது, சரியான இடங்களில் முதலீடு செய்தால்தான் அந்த பணம் பெருகி உங்களுக்கு செல்வத்தை சேர்த்து தரும். தற்போது ஏராளமான இந்தியர்களுக்கு இந்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
இளைஞர்கள் , குடும்பஸ்தன்கள் என பலரும் தங்களுடைய சம்பளத்தில் மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையை பங்குச்சந்தைகள், மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதை காண முடிகிறது. இவ்வாறு எஸ்ஐபி எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் அதாவது மாதந்தோறும், வாரம் தோறும் என தொகையை குறிப்பிட்ட சில காலத்திற்கு தொடர்ச்சியாக முதலீடு செய்வது உண்மையிலேயே பலன் தருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

எஸ்ஐபி முதலீடுகளை செய்துவிட்டு ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அதை மறந்து விடுங்கள் அது உங்களை கோடீஸ்வரனாக்கும் என ஏராளமான முதலீட்டு நிபுணர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். ஆனால் எஸ் ஐபி முதலீடுகள் அப்படி செயல்படுவதில்லை என்பது தான் உண்மை. அதற்கு ஒரு தெளிவான விளக்கத்தை தற்போது பார்க்கலாம்.
எஸ்ஐபி முதலீடுகளை நாம் ஒரு ஃபிக்ஸடு டெபாசிட்கள் போல பார்க்கிறோம், அதாவது மாதம் ஒரு தொகையை நான் முதலீடு செய்வேன் அது ஏறுகிறதா இறங்குகிறதா என்பது என் கவலையில்லை. ஆனால் 25 ஆண்டுகளில் எனக்கு 1 கோடி ரூபாய் கிடைப்பது உறுதி என எண்ணுகிறோம். இந்த அணுகுமுறை தான் தவறு.
இப்போது நமக்கு 1 கோடி ரூபாய் பெரிய தொகையாக இருக்கும் ஆனால் இன்னும் 20 ஆண்டுகளில் தற்போதைய 30 லட்சத்திற்கு என்ன மதிப்போ அதுதான் அப்போது 1 கோடிக்கு இருக்கும். அந்த சமயத்தில் என்னடா நாம் கஷ்டப்பட்டு சேமித்த பணம் நமக்கு எந்த பலனையும் தரவில்லையே என தோன்றும். எனவே தான் இலக்கு அடிப்படையில் எஸ் ஐபி திட்டமிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.அதாவது என்னுடைய இலக்கு குழந்தைகளின் மேற்படிப்பு, ஓய்வுகாலம் என பிரித்து கொள்ள வேண்டுமாம் அதற்கேற்ப முதலீடுகளை திட்டமிட வேண்டுமாம்.
உங்களுடைய எஸ்ஐபி-இன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு முதலீடு செய்யும்போது சந்தை இறக்கத்தில் இருக்கும் சமயத்தில் அதிக பணத்தை முதலீடு செய்யுங்கள் நான் எஸ்ஐபி செய்கிறேன் எனக்கும் பங்குச்சந்தைக்கும் தொடர்பில்லை என இருக்க கூடாது என்கின்றனர். உங்களின் முதலீடு இப்போது எப்படி இருக்கிறது , சந்தை இறங்கி இருக்கிறதா இன்னும் கொஞ்சம் சேர்த்து முதலீடு செய்யுங்கள் என்கின்றனர்.
அதாவது உங்களின் பணத்தை எப்போது எதில் முதலீடு செய்ய வேண்டும் அது எவ்வாறு வளர வேண்டும் என்பதை தீர்மானிப்பது நீங்களாக இருக்க வேண்டும். எனவே முதலீடுகள் குறித்து நிறைய கற்று கொள்ளுங்கள், அதனை செயல்படுத்துங்கள் அப்போது தான் முதலீடு எனும் சதுரங்க விளையாட்டில் நீங்கள் வெற்றி பெற முடியும், இல்லை என்றால் செக் வைத்து விடுவார்கள் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒரு சதுரங்கம் விளையாடும் போது முன் கூட்டியே எதிராளி எப்படி அடுத்த மூவ்வை எடுப்பார் என கணிக்கிறோம் அதற்கேற்ப நம்முடைய மூவை தீர்மானிக்கிறோம், எஸ்ஐபி முதலீடுகளும் அப்ப்டி தான் உங்களின் ஒவ்வொரு முதலீடும் நீங்கள் எடுக்கும் முடிவாகவும் வெற்றியை தரும் முடிவாகவும் இருக்க வேண்டும் என்கின்றனர்.
தற்போது இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியில் இருக்கிறது, பல பங்குகள் குறைந்த விலைக்கே கிடைக்கின்றன இந்த சமயத்தில் பாருங்கள் முதலீட்டு நிபுணர்கள் பலரும் கைகளில் பணத்தை வைத்து கொண்டு காத்திருக்கிறேன் என்பார்கள். சந்தை ஏறும் அறிகுறி தென்படும் போது அந்த பணத்தை உள்ளே கொண்டு வருவார்கள். நாமும் இதை போல சந்தை நகர்வுகளை கவனித்து முதலீட்டு உத்தியை அமைக்க வேண்டும் என்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications