பேசமா ஊருக்கே போயிடலாம்.. மெட்ரோ நகர மக்களின் புலம்பல்..!!

இந்தியாவில் நகர்ப்புறங்களில் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈடுபவர்களால் கூட ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முடியவில்லை என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள ஒரு பதிவு விவாதத்தை எழுப்பியுள்ளது.

அக்சய் ஸ்ரீவாஸ்தவா என்பவர் financial influencerஆக இருக்கிறார். முதலீடு மற்றும் இந்திய வரி நடைமுறைகள் குறித்து அவர் அவ்வப்போது சமூகவலைதளங்களில் பதிவு செய்த வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் அண்மையில் அவர் வெளியிட்ட ஒரு பதிவு இந்தியாவில் வாழ்க்கை தரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பேசமா ஊருக்கே போயிடலாம்.. மெட்ரோ நகர மக்களின் புலம்பல்..!!

கிராமத்தில் வசிப்பவர்கள் மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால் கூட ஒரு அரசனைப் போல வாழ்கிறார்கள், ஆனால் மும்பை போன்ற ஒரு நகரத்தில் நீங்கள் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்தால் கூட ஏழ்மையான வாழ்க்கை தான் வாழ வேண்டி இருக்கும் என பதிவு செய்துள்ளார்.

டெல்லி, மும்பை , பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் வசிக்கிறீர்கள் என்றால் உங்களுடைய வாழ்க்கைச் செலவினம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும் என கூறியுள்ளார்.

இந்தியாவின் மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடும்போது சார்ஜா உள்ளிட்ட நகரங்களில் வாழ்க்கை செலவினம் குறைவாக இருக்கிறது என்றும் அங்கே உங்களுக்கு வரி இல்லாத வருமான வாய்ப்பு கிடைக்கிறது என்றும் கூறுகிறார். மேலும் இந்தியாவில் குவாலியர் நகரை விட பாங்காக்கில் சொந்தமாக வீடு வாங்க முடியும் எனவும் அவர் கூறுகிறார்.

மேலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நீங்கள் வீடு வாங்க வேண்டும் என நினைத்தால், அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒரு பயனர் இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ நகரங்களுக்கு இணையாக ரியல் எஸ்டேட் விலை உயர்ந்து விட்டது, என்னுடைய சொந்த ஊரான கோரக்பூரில் இரண்டு மூன்று ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டன என கூறுகிறார்.

ஒரு பயனர் இந்தியாவில் மெட்ரோ நகரங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடங்களாக மாறி வருகின்றன எனக் கூறுகிறார். ஒரு பயனர் போக்குவரத்து நெரிசல், காற்று மாசு, அசுத்தமான தண்ணீர் , அதிகபட்ச வாழ்க்கை செலவினம் , நெருக்கமான குடியிருப்புகள் என மெட்ரோ நகரங்களில் வாழ்வதில் இருக்கும் சிரமங்களை பட்டியலிட்டுள்ளார்.

ஒரு பயனர் இந்தியாவில் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை நகரங்களில் வசிப்பதில் சிறந்த பலனே நமக்கு ஃபிரஷ்ஷான காய்கறிகள் கிடைக்கும் எந்த ஒரு ரசாயனமும் கலக்காத பொருட்கள் நமக்கு கிடைக்கும் என கூறியுள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+