மும்பை: ஒரு மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யம் என்றவுடன் ரிலையன்ஸ் குடும்பம் தான் நம் அனைவரின் நினைவுக்கும் வரும். ரிலையன்ஸ் குடும்பத்தை நிறுவிய திருபாய் அம்பானிக்கு இரண்டு மகன்கள். ஒருவர் முகேஷ் அம்பானி அவர்தான் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர்.
இவருக்கு முன்பு இவரது சகோதரரான அனில் அம்பானி தான் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். ஆனால் அவரது தொழில் பெரிய அளவில் நஷ்டம் அடைந்து பின்னர் அவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டார்.

இப்படி நஷ்டம் அடைந்து துவண்டு போயிருந்த அனில் அம்பானிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து இருக்கிறார் அவரது மகன் ஜெய் அன்மோல் அம்பானி. தற்போது 20,000 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார். அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கேப்பிடல் லிமிடெட் நிறுவனம் தற்போது அவரது மகன் ஜெய் அன்மோல் அம்பானியால் நடத்தப்பட்டு வருகிறது.
குடும்பத் தொழிலை மீட்டுக் கொண்டு வருவதில் மிக தீவிரமாக இருக்கிறார் ஜெய் அன்மோல் அம்பானி. தற்போது ரிலையன்ஸ் கேப்பிடல் லிமிடெட் நிறுவனத்தை மீட்டெடுத்து வெற்றிகரமாக அதனை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்திருக்கிறார்.
ஜெய் அன்மோல் அம்பானி மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கேனான் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தவர். இதனை அடுத்து பிரிட்டனில் உள்ள செவனொக் பள்ளியில் கல்லூரி படிப்பை முடித்தார்.
ஜெய் அன்மோலை பொறுத்தவரை ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் அவருக்கு 18 வயதாக இருக்கும்போதே இன்டர்னாக வேலைக்கு சேர்ந்தார். 2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தில் கூடுதல் இயக்குனராக அவர் நியமனம் செய்யப்பட்டார்.
பின்னர் செயல்பாட்டு இயக்குனராக ஒரு ஆண்டுக்குள்ளேயே அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. பின்னர் ரிலையன்ஸ் நிப்பான் லைப் ஆசெட் மேனேஜ்மென்ட் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனங்களின் வாரிய குழு இயக்குனராக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
ஜப்பானை சேர்ந்த நிப்பான் நிறுவனத்திலிருந்து கணிசமான தொகையை முதலீடாக பெற்று ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தை முன்னுக்கு கொண்டு வந்ததில் மிகத் திறமையாக செயல்பட்டவர் ஜெய் அன்மோல். அவரது குடும்பத்தினர் மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆடம்பரமான முறையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த வீட்டின் மதிப்பு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்தியாவிலேயே மிக ஆடம்பரமான குடியிருப்புகளில் ஒன்றாகவும் இது இருக்கிறது. தனிப்பட்ட முறையில் விமானங்களையும் வைத்து இருக்கிறார் சமூக ஆர்வலரும் தொழில் முனைவோருமான க்ரிஷா ஷாவை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் Rolls-Royce Phantom , Lamborghini Gallardo என பல்வேறு ஆடம்பர கார்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications