இந்தியாவில் தற்போது சாதாரண மக்களும் எளிமையான முறையில் பங்குச்சந்தைகளிலும், மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்து வருகின்றனர்.
இதற்கு, ஏஞ்சல் ஒன், குரோ, ஸெரோதா ஆகிய முதலீட்டு தளங்களின் வருகையின் முக்கிய காரணம். அந்த வகையில் இந்தியாவில் முதலீட்டுக்கான செயலிகளில் முன்னணியில் இருக்கிறது ஏஞ்சல் ஒன். இதன் நிறுவனர் 12ஆம் வகுப்பு மட்டுமே முடித்தவர்.

தினேஷ் தாக்கர், 12ஆம் வகுப்பு மட்டுமே முடித்தவர். மிகவும் போட்டிகள் நிறைந்த நிதித்துறையில் கால்பதித்தார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஏஞ்சல் புரோகிங் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 25,000 கோடிக்கும் மேல் உள்ளது.
பங்கு தரகு நிறுவனமான ஏஞ்சல் புரோக்கிங் லிமிடெட் நிறுவனம் 1996இல் தொடங்கப்பட்டது. தற்போது இது ஏஞ்சல் ஒன் லிமிடெட் என அழைக்கப்படுகிறது. மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை, தேசிய கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.
தற்போது இந்தியாவில் செயல்படும் பங்கு தரகு நிறுவனங்களில் ஏஞ்சல் ஒன் மூன்றாமிடத்தில் உள்ளது. 50 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ளது. ஆன்லைன் ஸ்டாக் புரோக்கிங், கமாடிட்டி டிரேடிங், இன்வெஸ்ட் அட்வைசரி, பெர்சனல் லோன், இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்டு விநியோகம் என பல தரப்பட்ட சேவைகளையும் வழங்குகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஏஞ்சல் ஒன் நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளது. இதனால் தினேஷ் தாக்கரின் சொத்து மதிப்பும் 3,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது இவரிடம் இல்லாத சொகுசு கார்களே இல்லை என்ற அளவுக்கு வாங்கி குவித்து வைத்திருக்கிறார். லம்போர்கினி ஸ்டெராடோ (Lamborghini Sterrato), மெர்சிடிஸ் ஈகியூஈ( Mercedes EQE), பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) ஆகிய கார்களை தன் வசம் வைத்துள்ளார்.
ஏஞ்சல் ஒன் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு ஏப்ரல் 27ஆம் தேதி பங்கு சந்தையில் 2,816 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 25,491 கோடி ரூபாய். இதன் புக் வேல்யூ 504.85 , ஃபேஸ் வேல்யூ 10 ஆகும். 2023இல் இதன் வருவாய் 3,021 கோடி ரூபாய் ஆகும், லாபம் 890 ரூபாய் ஆகும்.
ஏஞ்சல் ஒன் நிறுவன பங்குகளில் 38.21% புரமோட்டர்கள் வசமும், 35.03% பங்குகள் சில்லறை முதலீட்டாளர்கள் வசமும், 17.27% பங்குகள் வெளிநாட்டு நிறுவனங்களிடமும் உள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications