சென்னை: பிசினஸில் புதுமையை கொண்டு வருவதில் புகழ்பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு தொழிலதிபர் தான் சிகேஆர் என செல்லமாக அழைக்கப்படும் சி கே ரங்கநாதன். தற்போது ஷாம்பூக்கள் சாஷே பாக்கெட்டுகளில் கிடைக்கின்றன. அதற்கு முன்னோடியே இவரது தந்தை சின்னி கிருஷ்ணன் தான். வெல்வெட் ஷாம்பூ தான் முதன்முதலில் சாஷேக்களில் விற்பனை செய்யப்பட்டவை. அதனை அறிமுகம் செய்ததே சிகேஆரி தந்தை தான். எனவே தொழில்களில் புதுமையை கொண்டு வருவது இவரது ரத்தத்திலேயே ஊறியது.
1982 ஆம் ஆண்டு இவரது தந்தை திடீரென இறந்து போனார். எனவே குடும்பத் தொழிலை பார்க்க வேண்டிய நிலை சிகேஆருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் அவர் தன்னிச்சையாக தொழில் தொடங்க முடிவு செய்து 15,000 ரூபாய் முதலீட்டில் அவருடைய தந்தையின் பெயரான சின்னி கிருஷ்ணன் நினைவாக சிக் இந்தியா (Chinni Krishnan initials Chik India) என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

ஷாம்பூ தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இவர் புதுச்சேரியில் நான்கு ஊழியர்களுடன் ஷாம்பு தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கினார். 300 ரூபாய் வாடகைக்கு ஒரு இடத்தை எடுத்து 3500 ரூபாய்க்கு மெஷின்களை வாங்கினார். அப்போது 7 எம்எல் ஷாம்பு கொண்ட 75 பைசா சாஷேக்களை அவர் அறிமுகம் செய்தார். முதல் ஆண்டிலேயே 20,000 சாஷேக்களை விற்பனை செய்தார். சிக் ஷாம்பூவை அதிகரிக்கும் நோக்கில் இவர் ஐந்து காலியான ஷாம்பூ சாஷேக்களை வழங்கினால், ஒரு ஷாம்பூ இலவசம் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை எல்லாம் வெளியிட்டார்.
இதன் மூலம் இந்த ஷாம்பூவின் விற்பனை 12 கோடி ரூபாயை கடந்து புகழ்பெற்ற வெல்வெட் ஷாம்பு வையே பின்னுக்கு தள்ளியது. அத்துடன் ரங்கநாதன் நிறுத்தவில்லை மீரா ஹெர்பல் ஹேர் வாஷ் பவுடர், நைல் ஹெர்பல் ஷாம்பூ , ஸ்பின்ஸ் ஃபெர்பியூம் என அடுத்தடுத்த பொருட்களை அறிமுகம் செய்தார். அந்த வகையில் தென்னிந்தியாவில் இவரது நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்தது.
இதனை அடுத்து தன்னுடைய நிறுவனத்திற்கு கெவின்கேர் என பெயர் சூட்டினார். 1998 ஆம் ஆண்டு முதல் கெவின் கேர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக செயல்பட தொடங்கியது. ஃபேரவர் ஃபேர்னஸ் க்ரீமை அறிமுகம் செய்த இவர் 1998இல் இண்டிகா ஹேர் டையை அறிமுகம் செய்தார். அழகு சாதன பொருட்கள் சந்தையில் நுழைந்த அவர் தன்னுடைய நிறுவனத்தை சென்னைக்கு மாற்றினார். பின்னர் பால் உற்பத்தி துறையிலும் கால் பதித்தார். இதற்காக காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரகாஷ் டைரி என்ற நிறுவனத்தை 30 கோடி ரூபாய்க்கு வாங்கினார். 2008 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை வாங்கிய அவர் படிப்படியாக அதனை விரிவு படுத்தினார்.
2013 ஆம் ஆண்டில் கெவின் டைரி பிசினஸ் 250 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. இதனை அடுத்து கெவின் குழுமம் படிப்படியாக உயரத் தொடங்கியது தயிர், மில்க் ஷேக், பன்னீர் ஆகியவற்றை விற்பனை செய்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டில் இவரது நிறுவனம் 1532 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. தற்போது கெவின் கேர் நிறுவனம் ஒரு ஆண்டுக்கு 1962 கோடி வருமானத்தையும் 194 கோடி லாபத்தையும் ஈட்டுகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகும் இவரது நிறுவனம் நாள்தோறும் விரிவடைந்த வண்ணம் இருக்கிறது. 7 பிரிவுகளில் சுமார் 500க்கும் அதிகமான பொருட்களை கெவின் கேர் நிறுவனம் விற்பனை செய்கிறது. புதுமைகளை கொண்டு வருவதை மட்டும் நிறுத்திவிடவில்லை.
Written by: Devika


Click it and Unblock the Notifications