நூடுல்ஸ் என்ற உடன் நம் நினைவுக்கு வரும் பெயர் மேகி. மேகி பலருக்கும் பிடித்தமான ஒரு உணவு பொருள், மிக எளிதாக சமைத்து விடலாம் மற்றும் அதன் ருசி ஆகியவை காரணமாக இந்தியாவில் மேகி நூடுல்ஸுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்த மேகி எப்படி உருவானது? இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது என விரிவாக பார்க்கலாம்.

19ஆம் நூற்றாண்டின் இறுதி காலங்களில் சுவிட்சர்லாந்து நாட்டின் கெம்ப் ஹால் என்ற டவுனில் இருந்து ஜூலியஸ் மேகி என்ற ஒரு இளம் தொழில் முனைவோர் உருவானார். பல குடும்பங்களின் சமையலறையே தன்னுடைய தயாரிப்பு மூலம் ஆக்கிரமிப்பார் என்று அன்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
ஜூலியஸ் மேகி வீட்டிலேயே சில நிமிடங்களில் தயாரிக்க கூடிய சூப் வகைகளுக்கான பேக்கெட்டுகளை தயார் செய்வது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இதுதான் பின்னாளில் மேகி என்ற மிகப்பெரிய பிராண்ட் உருவாகுவதற்கு காரணமாக இருந்தது.
1880களில் பெண்கள் வெளியில் வேலைக்கு செல்ல தொடங்கி இருந்தனர். வேலையையும் கவனித்து வீட்டிலும் சமையல் வேலையை பார்ப்பது கடினமாக இருந்தது. எனவே இன்ஸ்டெண்ட் முறையிலும், எளிதாகவும் சமைக்க கூடிய ஒரு தயாரிப்பை கொடுத்தால் என்ன என்ற யோசனை ஜூலியஸ் மேகிக்கு உண்டானது.
அப்படி தான் 1900 களில் இவர் மேகி நூடுல்ஸை விற்பனை செய்யத் தொடங்கினார். மேகிக்கான பிராண்ட் லோகோ உள்ளிட்டவற்றை ஜூலியஸ் மேகி அவர்களே வடிவமைத்தார்.
இன்றும் கூட ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அவர் கையால் வரைந்த லோகோ கொண்ட பாக்கெட்டுகள் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 20 ஆம் நூற்றாண்டில் அதாவது 1982ல் நெஸ்லே என்ற சுவிட்சர்லாண்டை சேர்ந்த நிறுவனம் மேகி நூடுல்ஸை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
மேகி என்பது இந்தியர்களுக்கு புதுமையான ஒரு உணவாக தெரிந்தது. தொடக்க காலத்தில் இதனை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் படிப்படியாக மேகி இந்தியர்களின் விருப்பமான உணவாக மாறியது.
மேகியை இந்தியாவில் சந்தைப்படுத்துவதில் நெஸ்லே பல சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது. எனவே தொலைக்காட்சிகளில் மேகி நூடுல்ஸ் குறித்த விளம்பரங்களை செய்ய தொடங்கியது.
இரண்டு நிமிடங்களில் செய்துவிடலாம் என்ற அந்த விளம்பரம் பல இந்தியர்களின் கவனத்தை ஈர்த்தது. அப்படி தான் மேகி படிப்படியாக இந்தியர்களின் சமையலறைக்குள் நுழைந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய உணவு பாரம்பரியத்திற்கு ஏற்ற வகையில் பல ஃப்ளேவர்களில் மேகி அறிமுகம் செய்யப்பட்டது. இது பெரும்பாலான இந்தியர்களிடம் மேகியை கொண்டு சேர்ப்பதற்கு உதவியாக இருந்தது.
2015 ஆம் ஆண்டு மேகியில் அதிக அளவிலான எம்.எஸ்.ஜி மற்றும் லீட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தேசிய அளவில் மேகி நூடுல்ஸ்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை தகர்த்து வெளியே வந்த மேகி, மீண்டும் உணவு தர ஆணையத்தின் அனுமதி பெற்று விற்பனைக்கு வந்தது.
நூடுல்ஸ் என்றாலே இன்றளவும் அனைவரின் மனதிலும் மேகி என்ற வார்த்தை தான் வரும் அந்த அளவிற்கு நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு பிராண்டாக மேகி மாறி இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications