Palm Era: டிரெண்டாகும் திருநெல்வேலி ஸ்டார்ட்அப்.. பனைமரத்தில் ரூ.5000 கோடி வருவாய் ஈட்டலாம்..!!

சர்க்கரை உண்பதற்கு இனிப்பாக இருந்தாலும் பின்னாட்களில் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆனால் இந்த இனிப்பு சுவைக்கு அனைவரும் அடிமையாகி அதில் இருந்து மீள முடியாமல் பின்னாளில் நோய்வாய்ப்பட்டு தவிக்கிறோம்.

ஒரு காலத்தில் இனிப்பு என்று நாமெல்லாம் பயன்படுத்தியது கருப்பட்டி தான். ஆனால் சர்க்கரைக்காக செய்யப்பட்ட மார்க்கெட்டிங் கருப்பட்டிக்கு செய்யப்படவில்லை. இந்த விஷயத்தை கையில் எடுத்து சாதித்துள்ளது Palm Era நிறுவனம்.

Palm Era: டிரெண்டாகும் திருநெல்வேலி ஸ்டார்ட்அப்.. பனைமரத்தில் ரூ.5000 கோடி வருவாய் ஈட்டலாம்..!!

தமிழ்நாட்டின் மாநிலம் மரம் பனைமரம், ஆனால் பனைமரங்களை பாதுகாக்கவும் அது சார்ந்த தொழிலில் இருப்பவர்களை காக்கவும் நம் சமூகம் தவறி விட்டது. தங்கள் ஊரில் இருக்கும் பனைமரங்களையும் அது சார்ந்த தொழில்களையும் காக்க வேண்டும் என்ற எண்ணம் தான் Palm Era நிறுவனத்தின் தொடக்கத்துக்கு காரணம் என அதன் நிறுவனர் கண்ணன் கூறுகிறார்.

இவர் திருநெல்வேலி மாவட்டம் நம்பியான்விளை கிராமத்தை சேர்ந்தவர். ஐடி படித்து மென்பொருள் பொறியாளராக வேலைக்கு சென்றார். கோயில் விழாவுக்காக ஒரு முறை ஊருக்கு சென்ற போது தங்கள் கிராம விவசாயிகள் பனைமரங்களை வெட்டி அழிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். காட்டு பன்றிகள் வந்து பனம்பழங்களை சாப்பிடுவதாகவும் மற்ற பயிர்களை சேதப்படுத்துவதாகவும் கூறியுள்ளனர்.

எனவே பனம்பழம் கீழே விழாமல் இருக்கவும் பனை ஏறும் தொழிலாளர்களை காக்கவும் பாம் இரா என்ற நிறுவனத்தை தொடங்கி பனங்கருப்பட்டி மற்றும் பனை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறார். உடலுக்கு பல்வேறு நன்மைகள் கொடுக்க கூடியவையாக பனைமரம் சார்ந்த பொருட்கள் இருந்தாலும் அவற்றை நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்த முடிவதில்லை. எனவே தான் மக்கள் சர்க்கரை உள்ளிட்டவற்றுக்கு மாறுகின்றனர் என்பதை உணர்ந்தார். எனவே பல ஆராய்ச்சிகளை செய்து பல தோல்விகளையும் நஷ்டங்களையும் சந்தித்து தொழிலை படிப்படியாக வளர்த்தார்.

கருப்பட்டியை பவுடராக மாற்றி விற்பனை செய்ய தொடங்கினார். பாக்கெட்டுகளில் பயன்படுத்த ஏதுவாக ரெடி டூ யூஸ் முறையில் விற்பனைக்கு கொண்டு வந்தார். அப்படியே பனங்கிழங்கு பவுடர், கருப்பட்டி மால்ட் என பல பொருட்களை அறிமுகம் செய்தார். தங்கள் நிறுவன இணையதளம் வாயிலாகவும் , பிற விற்பனை தளங்கள் வாயிலாக இவற்றை விற்பனை செய்கிறார்.

தாங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு பாக்கெட்டிலும் உங்களின் ஆரோக்கியம் வலுவடைகிறது என்பது தான் இவர் முன் வைக்கும் விஷயம். அது பெருமளவில் மக்களிடமும் சென்று சேர்ந்திருப்பதாகவே தெரிகிறது. தாங்கள் விற்பனை செய்யும் அனைத்து பொருட்களிலும் அதில் என்னென்ன சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

குடும்பத்தில் முதல் பட்டதாரி, முதல் தொழில்முனைவோர் என அசத்தி வரும் கண்ணன் அண்மையில் விஜய் டீவியின் ஸ்டார்ட் அப் சிங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 1 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளார்.

Story Written : Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+