ஆச்சரியம் ஆனால் உண்மை..! வெறும் ரூ.3இல் தொடங்கிய பால் வியாபாரம் இன்று ரூ.842 கோடி..!

1975 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள தேசிய பால்வள ஆராய்ச்சி இன்ஸ்டிட்டியூட்- National Dairy Research Institute (NDRI) வளாகத்தில் ஒரு பால்பூத்தை வைத்து தினமும் 3 ரூபாய் சம்பாதித்து வந்தார் அந்த 17 வயது மேற்கு வங்க விவசாயி மகன்.

அவரது பெயர் நாரயணன் மஜூம்தார். தனது படிப்புக்காக பகுதி நேரமாக பால் விற்கும் பூத்தில் வேலை செய்தார். தனக்கென்று சுயமாக பால்பண்ணை வைத்தபோது மேற்குவங்கத் தலைநகர் ஹௌராவில் சைக்கிளில் சென்று வீடு வீடாக பால் சேகரித்து வந்த அயராத உழைப்பாளி.

ஆச்சரியம் ஆனால் உண்மை..! வெறும் ரூ.3இல் தொடங்கிய பால் வியாபாரம் இன்று ரூ.842 கோடி..!

இன்றைக்கு கிழக்கின் பால்க்காரர் என்ற பெருமைக்குரிய அடைமொழிக்கு சொந்தக்காரர். அவருக்குச் சொந்தமாக ரெட் கௌ டெய்ரி பிரைவேட் லிமிடெட் என்ற பால்பண்ணை நிறுவனம் உள்ளது.
கிழக்கிந்தியாவில் உள்ள மிகப் பெரிய பால் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. வருடத்துக்கு அதன் டர்ன்ஓவர் ரூ.842 கோடியாக உள்ளது.


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் இந்த ரெட் கௌவிடம் கைகோர்த்துள்ளனர். தினமும் 4.5 லட்சம் லிட்டர் பால் மற்றும் பால்பொருட்களை விற்பனை செய்கிறது. இத்துடன் தயிர், மோர், இனிப்புகள், பனீர் போன்ற பிற பால் பொருட்களையும் விற்பனை செய்கின்றது.

நான் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளை தவற விடுவதே இல்லை. டார்ஜீலிங்கில் கோழி, இஞ்சி விற்றேன். பஹ்ரைனில் வேலைபார்த்தபோது எனக்கு விடுமுறை இருக்கும்போது அங்குள்ள அரபிக்கடல் பீச்சில் ஐஸ்கிரீம் விற்றுள்ளேன். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதே எனக்கென்று சுயமாகத் தொழில் தொடங்கி விட்டேன் என்று மலரும் நினைவுகளைப் பகிர்கிறார் நாராயணன் மஜூம்தார்.

எனக்கு பணத்தின் முக்கியத்துவம் தெரியும் என்று கூறுகிறார் 65 வயதான மஜூம்தார். 2023-24 நிதியாண்டு முடிவில் ரூ.1000 கோடி டர்ன்ஓவரை செய்ய வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள பூலியா கிராமத்தில் வசித்த ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் மஜூம்தார் பிறந்தார். உள்ளூர் பள்ளியில் படித்தார். 1975இல் ஹரியானாவில் உள்ள தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் பால்பண்ணை தொழில்நுட்பத்தில் பிஎஸ்சி பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது இருந்த கல்விக்கட்டணமான ரூ.250 அவருக்கு மிக அதிகமாக இருந்தது. இதைச் சமாளிப்பதற்காக முதலாண்டு படிப்பின்போது பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டார். அதிகாலை 5 மணி முதல் 7 மணிநேரம் வரை அங்குள்ள பால் பூத்தில் பால் விற்றதற்காக ரூ.3 சம்பளம் கிடைத்தது. இந்தப் பணத்துடன் மேற்கு வங்க அரசு தந்த ஸ்காலர்ஷிப் ரூ.100 கிடைத்தது. இவ்வாறு தனது பட்டப்படிப்பை 1979இல் மஜூம்தார் முடித்தார்.

இருப்பினும் அவரது படிப்புக்காக அவரது குடும்பத்தினர் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை விற்றனர். இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள குவாலிட்டி ஐஸ்கிரீம் நிறுவனத்தில் டெய்ரி கெமிஸ்ட்டாக வேலைக்கு சேர்ந்தார்.
கொல்கத்தாவின் கிதிர்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 4 மணிக்கு ரயிலைப் பிடித்துவந்து 5 மணிக்கு புலியாவில் உள்ள அலுவலகத்துக்கு வருவார். பின்னர் நள்ளிரவின்போது வீட்டுக்கு திரும்பும்போது மஜூம்தாரின் தந்தை வந்து அழைத்து செல்வார்.
ஆனால் இந்த வேலை மூன்று மாதத்தில் அலுத்து விட்டது.

பின்னர் சிலிகுரியில் மதர் டெய்ரியின் பொதுமேலாளரை சந்தித்தபோது மஜூம்தாரை மதர் டெய்ரியின் கொல்கத்தா அலுவலகத்தில் வேலைக்கு சேரச் சொன்னார்.

மதர் டெய்ரியில் 1981 ஆம் ஆண்டில் வேலைக்குச் சேர்ந்தபின்னர் மளமளவென பதவி உயர்வுகலைப் பெற்றார். 1985இல் மதர் டெய்ரியை விட்டு விலகிய மஜூம்தார் பஹ்ரைனில் உள்ள டேனிஷ் டெய்ரியில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து விலகி மீண்டும் மதர் டெய்ரியில் வேலைக்கு சேர்ந்தார்.

தனது வேலையில் தொடர்ச்சியாக பல முன்னேற்றங்களை சந்திக்க விரும்பிய மஜூம்தார் 1995இல் தாக்கர் டெய்ரி பிரைவேட் லிமிடெட்டில் கன்சல்சன்ட் பொது மேலாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

1997இல் ஹௌரா மாவட்டத்தில் உள்ள தாக்கர் டெய்ரிக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டும் என்று நிர்வாக இயக்குநரிடம் எடுத்துரைத்தார். அதை அவர் ஏற்றுக் கொண்டார்.

1997 ஜூன் 19 ஆம் தேதியிலிருந்து தாக்கர் டெய்ரிக்கு பால் உற்பத்தியாளர்கள் பால் சப்ளை செய்யத் தொடங்கினர். முதல் நாளில் 319 லிட்டர் பால் மட்டுமே கிடைத்தது. பின்னர் படிப்படியாக நிறைய பால் உற்பத்தியாளர்கள் பாலை வழங்கத் தொடங்கினர்.
பால் கொள்முதலில் மஜூம்தார் கில்லாடியாக விளங்கினார். தரமான பாலை அவர் கொள்முதல் செய்தார்.

1997இல் மஜூம்தாரின் செயல்பாட்டை கண்டு பாராட்டிய முதலாளி அவருக்காகவே ஒரு குளிர்சாதன நிலையத்தை அமைத்தார்.
பின்னர் மஜூம்தாரே ரூ.7-10 லட்சம் வரை முதலீடு செய்து பால் குளிரூட்டும் நிலையங்களை அமைத்தார்.

2000 ஆம் ஆண்டில் தாக்கரிடமிருந்து ஒரு குளிரூட்டும் நிலையத்தை மஜூம்தார் விலைக்கு வாங்கினார். முதன்முதலாக 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரியையும் வாங்கினார்.

2003இல் தாக்கர் டெய்ரியை விட்டு விலகி ரெட் கௌ டெய்ரி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை மஜூம்தார் தொடங்கினார். இதனிடையே கொல்கத்தா டெய்ரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ரெட் கௌ பாலி பவுச் பாக்கெட்டை அறிமுகப்படுத்தினார். முதல் நாளிலேயே 6340 லிட்டர் பாலை விற்றார்.

தரமான பாலை குறைந்த நேரத்தில் கொள்முதல் செய்து பதப்படுத்தியதால் ரெட் கௌ டெய்ரியின் வளர்ச்சி அதிகரித்தது. ஒருகட்டத்தில் 2007 ஆம் ஆண்டில் கொல்கத்தா டெய்ரி நிறுவனத்தை ரூ.90 லட்சத்துக்கு விலைக்கு வாங்கினார்.

2007 ஆகஸ்ட் 25இல் மஜூம்தாரின் மகனும் தனது தந்தையின் தொழிலில் இணைந்தார். அப்போது தினமும் 32,000 லிட்டர் பால் மற்றும் தயிர் விற்பனை செய்யப்பட்டது. மஜூம்தாரின் மகன் நந்தன் பிர்லா இன்ஸ்டிட்டியூட்டில் முதுகலை பட்டம் முடித்தார்.

இன்றைக்கு ரெட் கௌ டெய்ரி ஜாகுராம், ஷிபானிபூர், பஞ்ச்காரா ஆகிய மூன்று இடங்களில் உற்பத்தி நிலையங்களை நடத்தி வருகின்றது. மாநிலத்திலேயே அதிக திறன் கொண்ட நிறுவனமாக ரெட் கௌ உருவெடுத்து நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பால் விற்பனையை மேற்கொண்டது. அந்த நிறுவனத்தில் மொத்தம் 1000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

மேற்கு வங்கத்தின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தினமும் 4.5 லிட்டர் பாலை சப்ளை செய்கின்றனர்.
பால் தவிர ரசகுல்லா, குலாப்ஜாமூன், 50 டன் தயிர், 3 டன் நெய் ஆகியவையும் உற்பத்தி செய்யப்பட்டது. இத்துடன் லஸ்ஸி, பனீர், நறுமணப்பால் ஆகியவையும் தயாரித்து விற்கப்பட்டது.

ரெட் கௌ நிறுவனத்தின் தயாரிப்புகள் தமிழ்நாடு, ஒடிசா, வடகிழக்கு, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் நேபாளத்திலும் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு 450 டிஸ்ட்ரிபியூட்டர்கள் உள்ளனர்.
பால் சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால் ரெட் கௌ மீது விவசாயிகளுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் கூட தாமதிக்காமல் பாலுக்குரிய விலையானது சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக அனுப்பப்பட்டது. பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலமும் பால் சப்ளை பெறப்பட்டது.

இந்த நிலையில் ரெட் கௌ புட் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் பாஸ்தா, சேமியா, மக்ரோனி, ஜூஸ்கள், ஜாம், ஊறுகாய் ஆகிய பொருட்களும் தயாரித்து வெகு ஜோராக நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+