திருச்சி: உலகம் முழுவதும் தற்போது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக தோன்றியிருக்கிறது. இவ்வாறு உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு கீரை ,காய்கறி , பழங்கள் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வும் அதிகரித்து இருக்கிறது.
அன்றாடம் கீரைகளை உட்கொள்ள வேண்டும் என்றால் கீரையை வாங்கி சுத்தம் செய்து உணவாக சமைப்பதற்கு பல பெண்களுக்கு தற்போது நேரம் இருப்பது கிடையாது. இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கிறார் திருச்சியை சேர்ந்த ஒரு பெண். தினசரி கீரை என்ற பெயரில் அவர் தொடங்கி இருக்கும் நிறுவனம் லட்சக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்து வருகிறது. லஷ்மி பிரியாவிற்கு குறித்த தேதிக்கு முன்னதாகவே அவருடைய மகன் பிறந்து விட்டார். ஆனால் பிறந்த குழந்தைக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகள் இருந்தன.

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லை எனக் கூறி குழந்தையை மருத்துவர்கள் இன்குபேட்டரில் வைத்து விட்டார்கள். குழந்தை பிறந்து சில நாட்களுக்கு தன்னால் கையில் கூட எடுக்க முடியாமல் போனதாம். எனவே தன்னுடைய குழந்தைக்கு முழுக்க முழுக்க சத்தான பொருட்களையே உணவாக வழங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாம். தினமும் உணவில் கீரையை சேர்க்க வேண்டும் என திட்டமிட்டாராம்.
ஆனால் மகன் வளர வளர கீரை என்றாலே வேண்டாம் என ஓடிவிடுவாராம் அப்போது தான் கீரை பொடி என்ற ஐடியா உருவானதாம். மகனை எப்படியாவது கீரையை உண்ண வைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வகைகளில் கீரையை உணவாக வழங்கி இருக்கிறார். அதுதான் இவருக்கு சுயதொழில் தொடங்குவதற்கான ஐடியாவையும் கொடுத்திருக்கிறது. தினசரி கீரை என்ற நிறுவனத்தை தொடங்கினார் லஷ்மி பிரியா.
40 வகையான கீரைகளைக் கொண்டு 15 வகையான ரெசிபிகளை இவர் தயார் செய்திருக்கிறார். மணத்தக்காளி, முடக்கத்தான் ,அகத்திக்கீரை, கரிசலாங்கன்னி என பல்வேறு கீரை வகைகளையும் கொண்டு பல வகையான ரெடி டு மிக்ஸ், ரைஸ் மிக்ஸ்களை இவர் தயாரித்து தற்போது விற்பனை செய்து வருகிறார். ஆரோக்கியமான உணவிற்கு தினசரி கீரை என்பதுதான் இவருடைய நிறுவனத்தின் தாரக மந்திரம்.
விற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு கீரை ரைஸ் மிக்ஸிலும் அந்தக் கீரையினால் நம்முடைய உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதையும் அச்சிட்டு வழங்குகிறார். இதனால் இவற்றை வாங்கி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது. அது மட்டும் இன்றி மூலிகை தேநீர், ஆவாரம் பூ தேநீர், சுக்குமல்லி காபி உள்ளிட்டவற்றையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு இவருடைய தினசரி கீரை நிறுவனம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு பொருட்களையும் ரெடி டு மிக்ஸ் வகையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதற்காக தன் ஊருக்கு அருகில் இருக்கும் விவசாயிகளை தொடர்பு கொண்டு அவர்களிடம் இருந்து நேரடியாக கீரை வகைகளை கொள்முதல் செய்கிறார். அவற்றை வாங்கி வந்து சுத்தம் செய்து காய வைத்து பவுடராக மாற்றி பாக்கெட் செய்து விற்பனை செய்கிறார்.
சாதத்துடன் கலந்து உண்ணக்கூடிய வகையில் சுவையான முறையில் இவர் கீரை பொடிகளை தயாரிப்பதால் இவருக்கு தற்போது தமிழ்நாடு மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இருந்து கூட வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications