டெல்லி: சிறிய அளவிலான முயற்சிகள் தான் பெரிய வெற்றியை தேடி தரும் என்பதற்கு உதாரணமான நபர் குறித்து தான் நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம். நிர்மல் குமார் மிண்டா 2024 ஆம் ஆண்டின் ஹரன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர். இவர்தான் ஹரியானாவின் குருகுராம் பகுதியில் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கிறார்.
நிர்மல் குமார் தற்போது UNO MINDA LTD நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார் .கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் இவரது சொத்து மதிப்பு 68% உயர்ந்துள்ளது. தற்போது இவர் 30,800 கோடி மதிப்பிலான சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

UNO MINDA நிறுவனம் வாகனங்களுக்கு தேவையான பாகங்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. ஒரு சிறிய வொர்க்ஷாப்பாக தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 66 ,094 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனமாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தை பொருத்தவரை கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தேவையான பாகங்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. இந்த நிறுவனம் நிர்மல் குமார் அவர்களின் தந்தையால் 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
டெல்லியில் ஒரு சிறிய வொர்க்ஷாப்பாக தான் இந்த நிறுவனம் முதலில் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக இவர்கள் மோட்டார் சைக்கிள்களுக்கு தேவையான எலக்ட்ரிக் பாகங்களை தயாரித்தனர். பின்னர் 1977 ஆம் ஆண்டு நிர்மல் குமார் மிண்டா தந்தையுடன் சேர்ந்து தொழிலில் இறங்கினார்.
அப்போது மார்க்கெட்டிங் பிரிவில் சேர்ந்த அவர் நிறுவனத்தை வெவ்வேறு மாநிலங்களுக்கும் விரிவு படுத்தினார். தற்போது UNO MINDA LTD நிறுவனம் உலகம் முழுவதும் 73 இடங்களில் உற்பத்தி ஆலைகளை நிறுவி செயல்படுத்தி வருகிறது.
2020ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு தேவையான சென்சார்கள் மற்றும் விளக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது மிண்டா குழுமத்தின் தலைவராக நிர்மல் குமார் மிண்டா செயல்பட்டு வருகிறார். இவருக்கு ஹரியானா ரத்னா விருது வழங்கி அம்மாநில அரசு கவுரவப்படுத்தியுள்ளது.
இவரது சொத்து மதிப்பானது 2018 ஆம் ஆண்டில் 1 பில்லியன் டாலராக இருந்து தற்போது 2.7 மில்லியன் டாலர் என அதிகரித்துள்ளது. இவர் பல்வேறு சமூக சேவை சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் . ஆதரவற்ற குழந்தைகளை தேர்வு செய்து அவர்களது கல்வி செலவுகளை ஏற்றுக் கொள்வது என்பன உள்ளிட்ட நற்பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications