தற்போது பெரிய தொழிலதிபர்களாக இருக்கக்கூடிய பெரும்பாலானவர்கள் , மிகச் சிறிய தொகையில் மிகச் சிறிய அளவில் தான் தங்களது தொழிலை நிறுவினர். பின்னாளில் அதனை வெற்றிகரமாக வளர செய்து நல்ல நிலைக்கு வந்துள்ளனர். அப்படி சந்துபாய் விரானி.
சந்துபாய் விரானி 1974ஆம் ஆண்டு தன்னுடைய சகோதரருடன் வேலை தேடி ராஜ்கோட்டிற்கு வருகை தந்துள்ளார். அப்போது ஒரு சினிமா தியேட்டரின் தின்பண்டங்களை விற்பனை செய்யும் வேலை கிடைத்தது. அப்போது மாதத்திற்கு ரூ.1,000 தான் இருவருக்கும் கிடைத்த ஊதியம். வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும் ,இன்னல்களையும் கடந்து வந்த விரானி சகோதரர்கள். அப்போது தீர்க்கமாக முடிவெடுத்து ஒரு ரிஸ்கை எடுத்தார் சந்துபாய் விரானி.

உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிலை கையில் எடுத்தனர். தற்போது அது தான் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்து விரானியை கோடீஸ்வரராக மாற்றி உள்ளது. பாலாஜி வேஃபர்ஸ் தற்போது இந்தியாவில் உள்ள முன்னணி ஸ்நாக்ஸ் தயாரிக்கும் நிறுவனம்.
சிறிய அளவில் சிப்ஸ் பாக்கெட்டுகளை தயாரித்து அக்கம் பக்கம் கடைகளுக்கு விநியோகம் செய்தார் விரானி. இதில் ஓரளவு லாபம் கிடைத்தது. இதனை அடுத்து 1982 ஆம் ஆண்டு ரூ.1.5 லட்சம் கடன் பெற்று முதன்முறையாக உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் ஒரு ஆலையையும் அவர் நிறுவினார் .
விரானிஇதில் பல்வேறு நிதி சார்ந்த சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. இருப்பினும் இந்த சவால்களை சாதுரியமாக கடந்து வந்த இவர் 1992 ஆம் ஆண்டு தன்னுடைய சகோதரரோடு இணைந்து பாலாஜி வேஃபர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு தனி நிறுவனத்தையே நிறுவினார்.
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தின்பண்டங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களில் பாலாஜி வேஃபர்ஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் தின்பண்டங்களின் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு 12% ஆகும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாலாஜி வேஃபர்ஸ் நிறுவனத்தின் வருவாய் என்பது ரூ.5,000 கோடி என்ற அளவை எட்டியது. தற்போது 7,000 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணி செய்து வருகின்றனர். இவர்களில் பாதி பேர் பெண்கள். ஒரு மணி நேரத்திற்கு 3,400 கிலோகிராம் சிப்ஸ் தயாரிக்கும் திறன் கொண்டது இவரது ஆலைகள்.
தற்போது 65க்கும் அதிகமான பொருட்களை இவர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்தியாவின் கடைகோடி கிராமங்களுக்கும் இவர்களது தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மிகச்சிறந்த டிஸ்ட்ரிபியூசன் நெட்வொர்க், தரமான பொருள் ஆகியவை இன்றளவும் தின்பண்டங்கள் சந்தையில் இவர்கள் நிலைத்து நிற்க காரணமாக இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications