இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த சாம்சங்கை பின்னுக்கு தள்ளி இரண்டே ஆண்டுகளில் முதலிடத்தை பிடித்தது சியோமி (Xiaomi) நிறுவனம். இந்த வெற்றிக்கு காரணம் மனு குமார் ஜெயின்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த ஸ்மார்ட் போன் பிராண்ட் ஆன சியோமி முதன்முறையாக இந்திய சந்தையில் கால் பதித்தது. குறைந்த விலையில் அதிநவீன அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் என்ற கருப்பொருளுடன் சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்தது. முதன்முறையாக பிளிப்கார்ட் தளம் மூலம் mi 3 போனை அறிமுகம் செய்தது. எதிர்பார்த்ததை விட இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

சாதாரண மக்களும் சாம்சங், ஐபோன் உள்ளிட்டவற்றில் இருக்கும் வகையிலான கேமரா, பேட்டரி திறன் ஆகியவற்றை கொண்ட அதே வேளையில் குறைந்த விலை கொண்ட போன்களை வாங்க முடியும் என்பதே சியோமி இந்தியாவில் வெற்றி பெறுவதற்கு காரணம். சந்தையில் நுழைந்த 2 ஆண்டுகளுக்குள் பரவலாக இந்திய சந்தையை ஆக்கிரமித்தது சியோமி.
சியோமியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மனோ குமார் ஜெய். சியோமி இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக 2014 ஆம் ஆண்டு இவர் பொறுப்பேற்றார். இந்திய வாடிக்கையாளர்களின் தேவை என்ன , அவர்களுக்கு எந்த மாதிரியான அம்சங்கள் கொண்ட போன்கள் தேவை என்பதை சரியாக புரிந்து வைத்திருந்தவர் மனோ குமார் ஜெயின். அது தவிர அவருடைய சிறந்த தலைமைத்துவ பண்பும் இந்தியாவில் இந்நிறுவனத்தை சிறப்பாக வழிநடத்தியது.
அவருடைய ஐடியாவில் தான் சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட் மீ சீரிஸ் போன்களை அறிமுகம் செய்தது. இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் சந்தையில் தற்போதும் கூட மிகச் சிறந்த விற்பனையை கொண்டதாக ரெட் மீ சீரிஸ் போன்கள் இருக்கின்றன. 2017 ஆம் ஆண்டு சியோமி நிறுவனம் இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்மார்ட் போன் பிராண்டாக மாறியது.
சாம்சங்கை பின்னுக்கு தள்ளி சியோமி நிறுவனம் இந்த இடத்தை பிடித்தது. நவீன அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் போன்களை மக்கள் வாங்கக்கூடிய விலையில் விற்பனைக்கு கொண்டு வந்ததே இதற்கு காரணம். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சியோமி நிறுவனம் இந்திய சந்தையை ஆக்கிரமித்து இருந்தது. இதனை தொடர்ந்து ரியல் மீ, விவோ உள்ளிட்ட நிறுவனங்களும் சியோமியுடன் கடுமையாக போட்டியிடத் தொடங்கின.
எனவே சியோமி நிறுவனம் ஸ்மார்ட் போன்கள் மட்டும் இல்லாமல் எம்ஐ டிவி மற்றும் பிட்னஸ் பேண்டுகள் உள்ளிட்டவற்றையும் விற்பனைக்கு கொண்டு வர தொடங்கியது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே இவற்றை தயார் செய்து விற்பனை செய்கிறது. தற்போதைக்கு சியோமி நிறுவனம் தன்னுடைய முதலிடத்தை விவோ நிறுவனத்திடம் இழந்துவிட்டது.
2022 ஆம் ஆண்டிலிருந்து சியோமி நிறுவனத்தின் ஆதிக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. திடீரென 2023 ஆம் ஆண்டு மனு குமார் ஜெயின் சியோமி நிறுவனத்திலிருந்து வெளியேறினார். அதன் பிறகு சியோமியின் விற்பனை சரிவடைய தொடங்கிவிட்டது. எல்லாம் ரெட் மீ போன்களும் ஒரே வடிவமைப்புகளை கொண்டிருப்பது, சியோமி பிராண்ட் இமேஜ் சற்றே சரிவடைந்து வருவது மற்றும் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு சிறந்த கேமராக்கள் கொண்ட போனை அறிமுகம் செய்வது ஆகியவையும் சியோமியின் விற்பனை சரிவுக்கு காரணமாக கூறலாம்.


Click it and Unblock the Notifications