தாம்பரம் மற்றும் ஆவடி இப்போ ரொம்ப பெருசு.. 37 கிராம பஞ்சாயத்துகள் இணைப்பு.. மெகா அப்டேட்..!!

சென்னை: ஜனவரி மாதத்திற்குள் தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் தன்னுடைய எல்லைகளை விரிவாக்கம் செய்கின்றன. இதன்படி இந்த இரண்டு மாநகராட்சிகளும் கூடுதலாக 37 கிராம பஞ்சாயத்துகள் சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது.

தாம்பரம் மாநகராட்சி பொருத்தவரை கூடுதலாக 18 கிராம பஞ்சாயத்துகளை தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் சேர்க்க இருக்கிறது. அகரம் தென், மேடவாக்கம், கோவிளம்பாக்கம், கவுல் பஜார், முடிச்சூர், பெரும்பாக்கம், நன்மங்கலம் , பொழிச்சலூர், திரிசூலம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, வேங்கைவாசல், மதுரப்பாக்கம், மூவரசம்பட்டு மற்றும் சித்தாலப்பாக்கம் ஆகிய கிராம பஞ்சாயத்துகள் தாம்பரம் மாநகராட்சியின் கீழ் இணைகின்றன.

தாம்பரம் மற்றும் ஆவடி இப்போ ரொம்ப பெருசு.. 37 கிராம பஞ்சாயத்துகள் இணைப்பு.. மெகா அப்டேட்..!!

தாம்பரம் மாநகராட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு தான் மாநகராட்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது தாம்பரம் மாநகராட்சியில் கூடுதலான கிராம பஞ்சாயத்துகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் இதன் பரப்பளவு 84.7 சதுர கிலோமீட்டர் இருந்து 172.34 சதுர கிலோமீட்டர் என விரிவடைகிறது. இது சென்னை மாநகராட்சியின் அளவில் நான்கில் ஒரு பங்கு ஆகும்.

அதேபோல தாம்பரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மக்கள் தொகை எண்ணிக்கை 7.23 லட்சத்திலிருந்து 10 .08 லட்சமாக உயர்கிறது.
2019 உள்ளாட்சி தேர்தல் காரணமாக பல்வேறு பஞ்சாயத்துகள் தாம்பரம் மாநகராட்சியில் சேர்க்க முடியாமல் போனது.

தற்போது அவற்றை சேர்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயரான காமராஜ் தெரிவித்துள்ளார். ஆவடி மாநகராட்சியை பொறுத்தவரை திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர் ஆகிய மூன்று நகராட்சிகளும் , வானகரம், அயப்பாக்கம், நெமிலிச்சேரி, அடையாளம்பட்டு, நடுக்குத்தாகை, காட்டுப்பாக்கம் ,சென்னீர்குப்பம், வரதராஜபுரம் ,நசரத்பேட்டை, அகரம் மேல், பண வீட்டுத் தோட்டம், பரிவாக்கம், கண்ணப்பாளையம், சூரஞ்சேரி, மோரை ,வெள்ளனூர் ,பாலவீடு மற்றும் மேப்பூர் ஆகிய 19 கிராம பஞ்சாயத்துகளையும் சேர்த்துக் கொள்கிறது.

இதன் மூலம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பரப்பளவு 65 சதுர கிலோமீட்டர் இருந்து 188 சதுர கிலோமீட்டர் என அதிகரிக்கிறது. ஆவடி மாநகராட்சியின் கீழ் வரும் மக்களின் எண்ணிக்கையும் 3.45 லட்சத்திலிருந்து 6.95 லட்சம் என உயர்கிறது. தற்போது மாநகராட்சிகளுக்குள் சேர்க்கப்பட்டிருக்கக் கூடிய கிராம பஞ்சாயத்துகளின் தலைவர்களின் பொறுப்பு 2024 ஆம் ஆண்டு இறுதி வரை இருக்கிறது.

எனவே அவர்களது பதவிக்காலம் முடிந்த பிறகு இவை முறைப்படி தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளோடு இணைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. எனவே ஜனவரி மாதம் முதல் தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளின் எல்லை விரிவது உறுதியாகியுள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+