இந்தியாவின் மிகப்பெரிய குழுமம் டாடா. இவர்கள் கால்பதிக்காத துறையே இல்லை என்ற அளவுக்கு கால் வைத்த இடமெல்லாம் இவர்களுக்கு வெற்றி தான். அப்படி டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு தற்போது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட அதிகரித்து சாதனை படைத்துள்ளது.
வருவாயை இரட்டிப்பாக்கிய நிறுவனங்கள்: டாடா மோட்டர்ஸ், டிசிஎஸ், டாடா பவர் என இந்த குழுமத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் வருவாய் அண்மை காலமாக உயர்ந்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த குழுமத்தின் சந்தை மூலதனமும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக டிஆர்எஃப், ட்ரெண்ட், பெனாரஸ் ஹோட்டல்ஸ், டாடா இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், டாடா மோட்டர்ஸ், , ஆர்ட்ஸன் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கL குறுகிய காலத்தில் தங்கள் செல்வத்தை இரண்டு மடங்காக்கியுள்ளன.
குறிப்பாக டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் 170 பில்லியன் அமெரிக்க டாலர். இது பாகிஸ்தானின் மொத்த பொருளாதாரத்தில் பாதி அளவு ஆகும்.
டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு 365 பில்லியன் டாலர்: டாடா குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வருவாய் அதிகரிப்பு காரணமாக ஒட்டுமொத்தமாக டாடா குழுமத்தின் சந்தை மதிப்பானது தற்போது 365 பில்லியன் டாலர்களாக உச்சத்தை தொட்டுள்ளது.
இது பாகிஸ்தான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை விட அதிகம். அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டின் படி, பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 341 பில்லியன் டாலர்கள் ஆகும்.
விரைவில் டாடா கேபிடல் ஐபிஓ: டாடா குழுமத்தை பொறுத்தவரை 25 நிறுவனங்கள் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அது இல்லாமல் டாடா சன்ஸ், டாடா கேபிடல், டாடா பிளே, ஏர் இந்தியா ஆகியவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள், இவற்றின் மதிப்புகளை எல்லாம் சேர்த்தால் டாடாவின் ஒட்டுமொத்த மதிப்பு எகிறிவிடும். இதில் டாடா கேபிடல் விரைவில் ஐபிஓ வெளியிட போகிறது, இதன் மதிப்பு மட்டும் 2.7 லட்சம் கோடியாகும்.
கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்: பாகிஸ்தானை பொறுத்தவரை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்த நாடு 125 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு கடனை செலுத்த வேண்டியுள்ளது.
அதுமட்டுமின்றி சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் டாலர்கள் நிதியுதவி திட்டமும் அடுத்த மாதம் முடிவடைவதால் பெரும் சிக்கல் ஏற்பட போகிறது. பாகிஸ்தானின் ஜிடிபி 2021ஆம் நிதியாண்டில் 5.8% என இருந்தது. அதுவே 2022இல் 6.1% என வளர்ச்சியை பதிவு செய்தது. இருப்பினும், 2023ஆம் நிதியாண்டில் வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் சரியில்லாதது மற்றும் வெள்ள பாதிப்புகளே இதற்கு பிரதான காரணமாகும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications