இந்த காலத்தில் ஒரு காரை வாங்குவது என்பது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், EMI-ல் கார் வாங்குவது சாதாரணமாக மாறிவிட்டது. ஆனால், உண்மையில் அந்த கார் உங்கள் வாழ்க்கையை வசதியாக்குகிறதா.? என்பதை கவனிக்காமல் விட்டு விடுகிறோம். அந்த வகையில், CA அபிஷேக் வாலியா என்பவரின் கிளையன்ட் சமீபத்தில் தனது முதல் காரை ரூ.12.8 லட்சம் செலவில் வாங்கியுள்ளார்.
முன்பணமாக ரூ.2.5 லட்சம் செலுத்தியுள்ளார். பின்னர், மாத தவணைத் தொகையாக ரூ.21.300 செலுத்தி வந்துள்ளார். ஆனால், இந்த காரை அவர் அடிக்கடி பயன்படுத்தவில்லை. வார இறுதி நாட்களில் மட்டுமே பயணித்து வந்துள்ளார். அப்போது, ஒரு நாள் செலவுகளை கணக்கிட்டு பார்த்தபோது, அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

காரில் ஒருமுறை செல்லும்போது, சுமார் ரூ.3,300 செலவாகிறது. இதேவேளை, Uber அல்லது Zoom car பயன்படுத்தியிருந்தால், ஆண்டு முழுவதும் சுமார் ரூ.90,000 மட்டுமே செலவாகி இருக்கும் என்று கூறியுள்ளார். ஒரு கார் வாங்குவது EMI கட்டுவதிலேயே முடிவடையவில்லை. அதன் பிறகு வரும் ஒவ்வொரு மாதச் செலவும் முக்கியம். அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாதத்திற்கு பொதுவாக பெட்ரோல் செலவு ரூ.2,800, ஆண்டுக்கு இன்சூரன்ஸ் செலவு ரூ.13,000, மாதத்திற்கு பார்க்கிங் மற்றும் சர்வீஸ் ரூ.1,500, மாதம் EMI மட்டும் ரூ.21,300 ஆகிறது. இதையெல்லாம் சேர்த்தால், ஒரு ஆண்டுக்கான மொத்த செலவு சுமார் ரூ.3.2 லட்சம் ஆகும். ஆனால், அவர் அந்த காரை மாதத்திற்கு சுமார் 8 முறை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இந்த செலவுகளைப் பார்த்தபோது, ஒவ்வொரு சவாரிக்கும் சுமார் ரூ.3,300 வரை செலவாகியிருக்கிறது.
அதே நபர் வார இறுதியில் பயணிக்க டாக்சி சேவைகளை பயன்படுத்தி இருந்திருந்தால், ஆண்டுக்கு சுமார் ரூ.90,000 மட்டுமே செலவாகியிருக்கும். நீங்கள் அதிகம் பயன்படுத்தாத காரை வைத்திருந்தால், நீங்கள் இயக்கத் திறனை வாங்குவதில்லை,.அதற்குப் பதிலாக நீங்கள் 'சொந்தக்காரர்' என்ற உணர்வுக்காக பணம் செலுத்துகிறீர்கள் என்பதே உண்மை.
நம்மைச் சுற்றியுள்ள நிதி முடிவுகளை நம் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளாமல், தோற்றத்திற்கு ஏற்றவாறு எடுத்துக்கொண்டால், அதன் செலவு நம்மை மிகக் கடுமையாக பாதிக்கக்கூடும் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு தெரியாமலே, மாதாந்திர EMI குறைவாக தெரியலாம். ஆனால், நீங்கள் காரை அதிகம் பயன்படுத்தவில்லை என்றால், உண்மையில் நீங்கள் 'தரத்திற்காக' அதிக பணம் செலுத்துகிறீர்கள் என அர்த்தம். நிதி என்பது வெறும் எண்கள் மட்டும் அல்ல, உங்கள் விருப்பங்கள், மதிப்புகளையும் பொருந்தும். காரை வைத்திருப்பதில் மகிழ்ச்சி உங்களுக்கு அதிகம் இருந்தால், அதற்கு செலவு செய்தல் சரி. ஆனால், வாரத்தில் சில நாள் மட்டும் பயணிக்கும்போது, நீங்கள் செலுத்தும் பணம் எவ்வளவு அதிகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் காருக்கான செலவுகள் உங்கள் பயன்பாட்டுக்கு ஏற்பத்தான் இருக்கிறதா என்பதை கணக்கிட்டு பார்க்க வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications