இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் புரளும் ஒரு தொழில். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு விளையாட்டு என்பதால் கிரிக்கெட்டிற்கும் அதில் விளையாடும் வீரர்களுக்கும் தனி மவுசு உண்டு. எனவே தான் கிரிக்கெட் வீரர்கள் உடனடியாக பிரபலமடைந்து விடுகின்றனர்.
மேலும் அவர்களின் சொத்து மதிப்பும் கூடி விடுகிறது. அப்படி கிரிக்கெட் வீரர்களாகி பணக்காரர் ஆனவர்களை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் தற்போது நாம் பார்க்கக்கூடிய வீரர்கள் ஏற்கனவே செல்வ வளம் மிக்க குடும்பத்தில் இருந்து கிரிக்கெட் துறையில் நுழைந்தவர்கள்.

கௌதம் கம்பீர்: அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் கௌதம் கம்பீர். சுமார் 205 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவர். இவரது தந்தையான தீபக் கம்பீர் மிகப்பெரிய டெக்ஸ்டைல் தொழில் அதிபர் ஆவார். பெரிய தொழிலதிபர் வீட்டில் பிறந்ததோடு மட்டுமில்லாமல் கிரிக்கெட் மற்றும் விளம்பரங்கள் மற்றும் பயிற்சியாளர் என பல்வேறு பணிகள் மூலம் இவர் கோடிக்கணக்கிலான சொத்தினை சேர்த்து வைத்திருக்கிறார்.
அஜய் ஜடேஜா: சுமார் 250 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட அஜய் ஜடேஜா நாவா நகர் ராயல் பரம்பரையை சேர்ந்தவர். அவரது முன்னோர்களான ரஞ்சித்சிஞ்சி மற்றும் துலீப்சிஞ்சி ஆகியோர் பெயரில் இந்தியாவில் கிரிக்கெட் கோப்பைகளே வழங்கப்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவரது தந்தை தவ்லத் செஞ்சி ஜடேஜா அரசியலிலும் கால்பதித்தவர். எனவே கிரிக்கெட் பாரம்பரியமும் அரசியல் செல்வாக்கும் மிகுந்தவர் அஜய் ஜடேஜா.
சௌரவ் கங்குலி: முன்னாள் இந்திய அணி கேப்டனான சௌரவ் கங்குலி கொல்கத்தாவை சேர்ந்த பணக்கார குடும்பத்து பிள்ளை ஆவார். அவரது தந்தை சந்திதாஸ் கங்குலி பிரிண்டிங் துறையில் முக்கியமான ஒரு நபராக இருந்தவர். இதனால் கொல்கத்தாவின் பணக்காரர்களுள் ஒருவராக அவர் அறியப்பட்டார். கங்குலியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 666 கோடி ரூபாயாக இருக்கிறது.
ஆரியமான் பிர்லா: ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் ஆரியமான் பிர்லா இந்தியாவின் புகழ்பெற்ற ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆவார். இவரது சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாயாகும். ஆரியமான் கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி ஆதித்யா பிர்லா குழுமத்தின் இயக்குனராகவும் பதவி வகித்து வருகிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications