சென்னை: இந்திய வெண்மை புரட்சியின் தந்தை டாக்டர். வர்கீஸ் குரியன். அவரது 102வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த வேளையில் இந்திய பால் துறையில் நாம் செய்துள்ள மகத்தான சாதனைகளை ஒரு ரவுண்ட் பார்க்கலாம் வாங்க.
வெண்மைப் புரட்சியின் வெற்றிக்கு நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் அயராத முயற்சியே காரணம். கால்நடை வளர்ப்பு, தீவன மேலாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவற்றில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு இந்திய பால் துறையை உலகத் தரத்துக்கு உயர்த்தியுள்ளது.

இன்றைக்கு இந்தியாவின் பால் உற்பத்தி 220 மில்லியன் டன்களுக்கு மேல் உள்ளது, இது 1960 களில் இருந்ததை விட 6 மடங்கு வளர்ச்சியாகும். 1990 களின் பிற்பகுதியில் பால் உற்பத்தியின் அடிப்படையில், வளர்ந்த பொருளாதார நாடுகளை நமது தாயகம் விஞ்சிய போது இந்திய பால் தொழில்துறை உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
இன்று, இந்திய பால் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5 சதவிகிதம் பங்களிக்கிறது. விவசாயத் துறையில் பால் துறையின் பங்களிப்பு 24 சதவிகிதம் ஆகும். இது சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது. இது உலகிலேயே மிக அதிகம்.
உலகின் மிகப்பெரிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் புதுமையான 'ஆபரேஷன் ஃப்ளட்' திட்டம் கோடிக்கணக்கான கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, நிரந்தரமான வருமானத்தை உருவாக்கி, வளர்ச்சிக்கான கருவியாக பால்வளத்தை மாற்றிக் காட்டியது.
இந்தியாவில் தற்போது, 8 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பால் துறையுடன் நேரடியாக தொடர்பில் உள்ளன. இந்த துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 70 சதவீதமாக உள்ளது. வேறு எந்தத் துறையையும் விட அதிகமாக பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் துறை இதுதான்.
இந்தியா மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் மட்டுமல்ல, பால் மற்றும் பால் பொருட்களின் மிகப்பெரிய நுகர்வோர் ஆகும். பால் நமது கலாசாரத்துடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டிருப்பதால், அதன் நுகர்வு அதிகரிக்கிறது. உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் ஆண்டுக்கு சுமார் 15 சதவீத வளர்ச்சியைக் கண்டு, இந்தியாவில் பால் உற்பத்தித் தொழில் 13 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. இந்திய பால் சந்தை 2027ல் ரூ. 30 டிரில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகளின் வருமானம் உயரும்.
இதுமட்டுமல்லாமல் பாலாடைக்கட்டி, இனிப்புத் தயிர், தயிர், ஐஸ்கிரீம்கள் போன்ற பொருட்களுக்கான விருப்பங்கள் மக்களிடையே அதிகரித்து வருகின்றன. இந்தப் பொருட்கள் மக்களது ஆரோக்கியத்துக்கு தேவையான ஊட்டத்தை வழங்கும்.
ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்ய மலிவான ஏற்பாடாக உள்ளது பால்துறை.
தற்போது மக்களிடையே ஏற்பட்டுள்ள சுகாதார விழிப்புணர்வு காரணமாக பேக் செய்யப்பட்ட மற்றும் பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பாலுக்கான தேவை அதிகரித்து வருவதால், கிராமப்புறத் துறையை பெரிய சந்தையாக மாற்ற முடியும். கால்நடை சிகிச்சைக்கான வசதிகளை விரிவுபடுத்த அவசிய தேவை உள்ளது. இது கால்நடை சுகாதாரத்தை உறுதி செய்து பால் உற்பத்தியை அதிகரிக்கும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications