பாஜக வெற்றிக்கு வித்திட்ட பெண்கள் உரிமை தொகை திட்டம்.. கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்த பெண்கள்!

மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கு பெண்களுக்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டமே முக்கியமான காரணம் என சொல்லப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரத ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மை பெற தேவையான தொகுதிகளை விடவும் கூடுதலான இடங்களை கைப்பற்றியுள்ளது.

சுமார் 220க்கும் அதிகமான இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்று இருப்பதால் மீண்டும் இவர்களே ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் அகாதி கூட்டணி சுமார் 55 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது.

 பாஜக வெற்றிக்கு வித்திட்ட பெண்கள் உரிமை தொகை திட்டம்..  கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்த பெண்கள்!


மகாராஷ்டிரா சட்டப் பேரவைக்கு புதன்கிழமை அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 66 சதவீத வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 149 இடங்களிலும் முதலமைச்சர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 81 இடங்களிலும் துணை முதலமைச்சர் அஜித் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த நிலையில் கணிசமான இடங்களை பாரதிய ஜனதா தலைமையிலான ஆளும் கூட்டணியே கைப்பற்றி இருக்கிறது.

இதனிடையே இந்த வெற்றிக்கு மகளிருக்கான உரிமை தொகை திட்டமே (Ladki Bahin Yojana) காரணம் என சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டைப் போலவே மகாராஷ்ட்ராவிலும் மகளிருக்கான உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மாதம் 1500 ரூபாயை உரிமைத்தொகையாக ஆளும் கட்சி வழங்கியது.

நான்கு மாதங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் , தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த தொகையை 2100 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என பாஜக கூட்டணி வாக்குறுதி அளித்தது. இதனால் பெண்கள் திரண்டு வந்து பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.

நடப்பாண்டின் தொடக்கத்தில் நடந்த மக்களவை தேர்தலில் மகாராஷ்ட்ராவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின, இந்த சட்டமன்ற தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பெண்கள் வாக்களித்த விகிதம் மக்களவை தேர்தலில் 59 சதவீதம் என இருந்து சட்டமன்ற தேர்தலில் 65 சதவீதம் என உயர்ந்துள்ளது.

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் பயனாளிகள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் எல்லாம் பெண்களின் வாக்கு அதிகமாக பதிவாகி இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 59.26 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன அதுவே தற்போது 66 சதவீதம் என உயர்ந்துள்ளது.

பெண்களின் வாக்கு சதவீதம் அதிகரித்ததே இதற்கு காரணம். 2019 சட்டமன்ற தேர்தலை விட இந்த முறை கிட்டத்தட்ட 52 லட்சம் பெண்கள் கூடுதலாக வாக்களித்துள்ளார்களாம்.தானே மாவட்டத்தில் 11 சதவீதம் கூடுதலாக பெண்கள் வாக்குப்பதிவாகியுள்ளது , மும்பையில் மட்டும் 7 சதவீதம் கூடுதலாக பெண்கள் வாக்கு பதிவாகி இருக்கிறதாம்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+