கச்சா எண்ணெய் வைக்க இடமில்லை.. இப்படியும் ஒரு பிரச்சனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில் கொரோனாவின் பாதிப்பு சர்வதேச வர்த்தகச் சந்தையை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. ஒருபக்கம் கச்சா எண்ணெய் தேவை குறைந்துள்ளது, மறுபக்கம் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு எவ்விதமான குறைப்பு இல்லாமல் வர்த்தகப் போட்டியின் காரணமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மறுபக்கம் கடல் வழி போக்குவரத்து பல நாடுகளில் முடங்கியுள்ளது, இதனால் கச்சா எண்ணெய் விநியோகமும் பாதித்துள்ளது.

 

இந்த மோசமான வர்த்தகச் சூழ்நிலையை மேலும் மோசமாக்க புதிய பிரச்சனை ஒன்று உருவாகியுள்ள

இந்தியா

இந்தியா

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகளவில் குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் அதிக லாபத்திற்காகப் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் நிறுவனங்களும், சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே அதிகளவிலான கச்சா எண்ணெய் வாங்கிக் குவித்து உள்ளது.

புதிய பிரச்சனை

புதிய பிரச்சனை

ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் மக்கள் வீட்டில் முடங்கியுள்ளதால் பெட்ரோல், டீசல்-இன் தேவை அதிகளவில் குறைந்து, வர்த்தகம் பெரிய அளவில் பாதித்துள்ளது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை ஆகாமல் கச்சா எண்ணெய் அதிகளவில் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் கூடுதலாகக் கச்சா எண்ணெய் வாங்கிச் சேமித்து வைக்க இடம் கூட இல்லாத நிலை உலக நாடுகள் ஏற்பட உள்ளது.

இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் வர்த்தகம் முடங்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது என்றால் மிகையில்லை.

கூடுதலான கச்சா எண்ணெய்
 

கூடுதலான கச்சா எண்ணெய்

IHS மார்கிட் அமைப்பின் ஆய்வுகளின் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தேவை மற்றும் விநியோகத்திற்குமான வித்தியாசம் 2020 முதல் 6 மாத காலத்தில் 1.8 பில்லியன் பேரலாக இருக்கும் என அறிவித்துள்ளது.

முதல் 3 மாத காலத்திலேயே இதன் அளவு 1.6 பில்லியன் பேரல் அலவை எட்டிவிட்ட நிலையில், அடுத்த 3 மாதத்தில் கச்சா எண்ணெய் சேமித்து வைக்கக் கூட இடம் இல்லாத நிலை உருவாகும் எனத் தெரிகிறது.

ஓரே வழி

ஓரே வழி

தற்போது இருக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு குறைக்கப்படவில்லை எனில் உலகில் கச்சா எண்ணெய் வர்த்தகம் 90 சதவீதம் வரையில் முடங்கும் நிலை ஏற்படும்.

இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க ஓரே வழி. கொரோனா பிரச்சனை தீர்த்து வர்த்தகச் சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது தான் சிறந்த வழியாக இருக்கும் என IHS மார்கிட் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

வியாழக்கிழமை பாகிஸ்தான் கச்சா எண்ணெய் சேமித்து வைக்க இடமில்லாத காரணத்தாலும், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் தேவை அதிகளவில் குறைந்துவிட்டதாலும், இதன் இறக்குமதிக்கு முழுமையான தடை வித்துள்ளது.

ஏற்கனவே பல டேக்கர் கப்பல்கள் கச்சா எண்ணெய் இருப்புடன் கடலில் தத்தளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The World’s on the brink of running out of places to store oil

The world will run out of places to store oil in as little as three months, according to an industry consultant. IHS Markit said that current rates of supply and demand mean inventories will increase by 1.8 billion barrels over the first half of 2020. With only an estimated 1.6 billion barrels of storage capacity still available, producers will be forced to cut output because by June there’ll be no place left to put the unwanted crude.
Story first published: Saturday, March 28, 2020, 18:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X