சர்வதேச மாணவர்களுக்கு அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டனில் வேலை வாய்ப்புகளே கிடையாது என ராஜேஷ் சாவ்னி (rajeshsawhney) என்பவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
GSF India என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் பெரிய அளவிலான முதலீட்டாளராகவும் இருப்பவர் தான் ராஜேஷ். இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிலை ,வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து தொடர்ச்சியாக அவர் எழுதி வருபவர். அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு இனி அமெரிக்கா மற்றும் பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு என்பதே கிடையாது எனக் கூறியிருக்கிறார்.

ஹனிமூன் காலம் என்பது முடிந்துவிட்டது என தெரிவித்திருக்கும் அவர் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி பல லட்சம் ரூபாய் செலவு செய்து படிக்க வைப்பதற்கு முன்பாக ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறியிருக்கிறார் .குறிப்பாக இந்தியாவில் ஐஐடி நிறுவனங்களில் கல்வி பயின்ற மாணவர்கள் எல்லாம் அமெரிக்கா சென்று முதல்நிலை படிப்பை முடிப்பார்கள் உடனடியாக அவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான டாலர்கள் சம்பளத்தில் வேலை கிடைத்துவிடும் ஆனால் இனி அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என தெரிவித்திருக்கிறார்.
ராஜேஷின் இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த பதிவினை பார்த்துள்ளனர். அதாவது பெரிய கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று விட்டாலே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடும் என்ற நிலைமை மாறிவிட்டது தற்போது மிக மிக கடினமான ஒன்றாகவும் இருக்கிறது என அவர் தன்னுடைய பதிவில் தெரிவித்திருக்கிறார் .அவருடைய இந்த பதிவுக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஒரு பதிவர் அமெரிக்காவில் உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கிறது ஆனால் விசா கிடைப்பதில் ஏற்படும் பிரச்சனை உள்ளிட்டவையே இந்த நிலைமைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
2030-ம் ஆண்டிற்கு பிறகு வெளிநாட்டில் சென்று படித்து வாங்கிய பட்ட படிப்பெல்லாம் வெற்றி பேப்பராக மட்டுமே இருக்கும் என ஒரு பயனர் கூறியிருக்கிறார். பலரும் உள்நாட்டில் இருக்கும் மாணவர்களுக்கே வேலை வாய்ப்பு கிடைக்காத போது அந்த நிறுவனங்கள் எப்படி வெளிநாட்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் எனக் கூறியிருக்கின்றனர்.
ஒரு பயனர் அமெரிக்காவில் உற்பத்தி துறை பெரிய அளவில் வளர்ச்சி அடையப் போகிறது என்பதால் கண்டிப்பாக வருங்காலங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டு என கூறி இருக்கிறார். அதற்கு பதில் அளித்திருக்கும் ராஜேஷ் அமெரிக்கா ஆலைகள் எல்லாம் முழுக்க முழுக்க ரோபோடிக்ஸ் மூலம் இயக்கப்படும் ஆலைகளாக மாறிவிடும் என பதில் அளித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications