பிரயாக்ராஜ், உத்தரபிரதேசம்: உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி மிகக் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. மகா கும்பமேளாவில் 65 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடினர். இந்தியா மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டனர்.
மகா கும்பமேளா வெற்றிகரமாக நடைபெறுவதற்கு சில நிறுவனங்கள் மிகவும் உறுதுணையாக இருந்தன. அவை என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஓலா:
ஓலா நிறுவனம் மகா கும்பமேளா நடைபெறக்கூடிய இடங்களில் தங்களுக்கு சொந்தமான 1000 மின்சார இரு சக்கர வாகனங்களை சேவைக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பெட்ரோல் டீசல் வாகனங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டு கார்பன் வெளியீடு குறைந்தது.
ஐஐஎஃப்எல் பவுண்டேஷன்:
இந்த நிறுவனம் 15 படகு ஆம்புலன்ஸ்களை அறிமுகம் செய்தது. இவை ஆங்காங்கே கரையோரம் நிறுத்தப்பட்டிருந்தன. படகுகளில் செல்பவர்களுக்கு ஏற்படக்கூடிய அவசரகால மருத்துவ தேவைகளுக்கு இந்த படகு ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது.
ஸ்விக்கி:
மகா கும்பமேளா நடைபெறக்கூடிய இடத்தில் மிகப் பெரிய எஸ் வடிவத்தை ஸ்விக்கி நிறுவியிருந்தது. இதில் ஒரு கியூஆர் கோடும் இடம் பெற்றிருந்தது. ஒருவேளை யாரேனும் மகா கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் காணாமல் போய்விட்டால் இந்த எஸ் பாயிண்ட் அவர்களை இணைக்கும் பகுதியாக செயலபட்டது.
பார்க்+ நிறுவனம்:
பிரயாக்ராஜில் ஸ்மார்ட் பார்க்கிங் நடைமுறையை கொண்டு வந்தது இந்த நிறுவனம். இதன் மூலம் வெளியூர்களில் இருந்து வந்தவர்களும் உள்ளூரை சேர்ந்தவர்களும் எளிதாக தங்களுடைய வாகனங்களை பார்க் செய்து மீண்டும் எடுப்பதற்கு வசதியாக இருந்தது.
டெட்டால்:
15,000 தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரப் பணிகள் தொடர்பான பயிற்சி அளித்தது நிறுவனம்.
பிளிங்கிட்:
கும்பமேளா நடைபெற்ற இடத்தில் தற்காலிக கடைகளை அமைத்து அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை உடனடியாக கிடைக்க வழி வகை செய்தது.
விஐ ஜான்:
இந்த நிறுவனம் நகரும் சலூன் கடைகளை நடத்தியது. இதன் மூலம் பல்வேறு பக்தர்களும் மொட்டை அடித்துக் கொள்வது ஷேவிங் செய்து கொள்வது எளிமையானது.
அமேசான்:
இந்த நிறுவனம் தங்களுடைய அட்டைப் பெட்டிகளை கொண்டு படுக்கைகளை உருவாக்கி தந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சௌகரியமாக ஓய்வெடுப்பதற்கு இதனை பயன்படுத்திக் கொண்டனர்.
கோகோ கோலா:
கோகோ கோலா நிறுவனம் சுமார் 100 இடங்களில் தங்களுடைய கடைகளை நிறுவி பக்தர்களுக்கு தகிக்கும் வெயிலில் இருந்து நிவாரணம் அளித்தது.
வாலினி:
நீண்ட தூரம் பயணம் செய்து மற்றும் நீண்ட தூரம் நடந்தே வரக்கூடிய பக்தர்களுக்கு மசாஜ் தெரபி கேம்புகளை நடத்தியது.
எவரெடி நிறுவனம்:
பிரயாக்ராஜில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கு ஐந்தாயிரம் சைரன் டார்ச்சுகளை வழங்கி பாதுகாப்பை உறுதி செய்தது.
கேடிஎம்:
கேடிஎம் நிறுவனம் 90 இடங்களில் மொபைல் ஃபோன்களை சார்ஜ் செய்வதற்கான மையங்களை ஏற்படுத்தி தந்தது. சுமார் 16 லட்சம் பேர் ஒரே சமயத்தில் சார்ஜ் செய்து கொள்ளக் கூடிய வகையில் இந்த சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டிருந்தன.
ரிலையன்ஸ்:
பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கு ஏதுவாக ஆங்காங்கே ஓய்வு மையங்களை ஏற்படுத்தி தந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டனர.
மேன்கைண்ட் பார்மா:
கும்பமேளா நடைபெறக்கூடிய அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்களை நடத்தியது. இதன் மூலம் பக்தர்கள் அனைவரும் இலவசமாக மருத்துவ சேவைகளை பெற்றுக் கொண்டனர்.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications