மும்பை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் டாடா குழும தலைவருமாக இருந்த ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக கடந்த வாரம் காலமானார். அவரது மறைவு இந்திய தொழில்துறையில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கி இருக்கிறது.
இந்த சூழலில் ரத்தன் டாடாவின் நினைவுகளை பகிர்ந்து டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரான என். சந்திரசேகரன் தன்னுடைய லிங்க்டின் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் ரத்தன் டாடா எப்பொழுதுமே தன்னுடைய ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் நலமாக இருப்பதை உறுதி செய்தவர் என தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடாவை சந்தித்த எவரும் அவருடைய மனிதாபிமானம், அரவணைப்பு இந்தியாவைப் பற்றிய அவருடைய கனவு ஆகியவற்றைப் பற்றிய கதை இல்லாமல் இருக்க மாட்டார்கள் அவரைப் போல் யாருமே இங்கு இல்லை என்று சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தனக்கும் ரத்தன் டாடாவுக்கும் இடையிலான உறவு ஆண்டு கணக்கில் வளர்ந்தது என குறிப்பிட்டுள்ள அவர், முதலில் தொழில் சார்ந்ததாக தொடங்கி, பின்னரது தனிப்பட்ட உறவாக மாறியது எனக் கூறியுள்ளார். கார்களில் தொடங்கி ஹோட்டல்கள் வரை நாங்கள் ஏராளமான விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறோம். அந்தப் பேச்சு தினசரி வாழ்க்கை நிகழ்வுகள் பற்றியதாக மாறும் போது அவர் எவ்வளவு விஷயங்களை உன்னிப்பாக கவனித்து இருக்கிறார் என்பது தெரியவரும் எனக் கூறியுள்ளார்.
தான் டாடா சன்ஸ் தலைவராக பதவியேற்ற போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சம்பள உயர்வு கோரி நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது ரத்தன் டாடாவும் நானும் யூனியன் தலைவர்களை சந்தித்தோம். அந்த சந்திப்பில் ரத்தன் டாடா இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு மன்னிப்பு கூறினார். மேலும் நிறுவனத்தின் தற்போதைய நிலவரம் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.
ரத்தன் டாடா பிரச்சனையை மட்டும் தீர்க்க முற்படாமல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனிலும் அக்கறை காட்டியவர் என புகழ்ந்துள்ளார். டாடா குழுமத்திற்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களையும் அவர் ஒரே மாதிரியாகத்தான் பார்த்தார் அதுதான் டாடா நிறுவனத்தில் தற்போது இருக்கும் தலைவர்களையும் செதுக்கியுள்ளது என சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார். நாய்கள் மீதான ரத்தன் டாடாவின் அக்கறையையும் சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரத்தன் டாடாவின் நினைவுத்திறன் மிக அபாரமானது என குறிப்பிட்டுள்ளார் சந்திரசேகரன். அதாவது ஒரு இடத்திற்கு சென்றால் அங்கே இருந்த ஒரு சின்ன நாற்காலி தொடங்கி அனைத்து விஷயங்களையும் அவர் நினைவில் வைத்துக் கொள்வாராம். ஒரு புத்தகம் இருந்தால் கூட அதில் என்ன கவர் படம் இருந்தது ,அதில் என்ன எழுதப்பட்டிருந்தது, அது வெளிவந்த ஆண்டு என அனைத்தையும் நினைவில் வைத்திருப்பாராம். ரத்தன் டாடா பற்றி கூறுவதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
ஆனால் இப்போது அவருடைய இல்லாமையில் அவர் எப்படி அனைத்தையும் தெளிவாக பார்த்து தெளிவாக புரிந்து கொண்டாரோ அப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறேன் பதிவு செய்துள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications