ஒவ்வொரு நாளும் உலகம் தன்னை புதுப்பித்து வரும் நிலையில், புதிய தொழில்களும் நாட்டில் பெருகிவிட்டன. முன்பு வாடகை கார்களில் செல்வதற்கு வாடிக்கையாளர்கள் அதிக தொகை செலுத்தியதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பல்வேறு செயலிகளின் உதவியால், வாடகை கார்கள், பைக்குகளின் சேவை எளிமையாக மாற்றப்பட்டுள்ளது.
ஃபாஸ்ட்-ட்ராக் (Fastrack) போன்ற முன்னணி கால் டாக்சி நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக இந்தியா வந்த நிறுவனங்களே ஓலா (Ola) மற்றும் ஊபர் (Uber) ஆகும். இவை இரண்டும்தான் தற்போது நாட்டின் முன்னணி கேப் சேவை நிறுவனங்கள் ஆகும். இவற்றிற்கு போட்டியாகவும் வந்த வாகன சேவை நிறுவனம் தான் ரேபிடோ (Rapido). இந்த நிலையில், டெல்லியில் உபெர் கார் டிரைவர் ஒருவர் தனது புதுமையான யோசனைகளால், வாடிக்கையாளர்களிடையேவும், நெட்டிசன்களிடையேவும் பாராட்டை பெற்று வருகிறார்.

டெல்லி-என்.சி.ஆர் பிராந்தியத்தில் மிகவும் விரும்பப்படும் தனியார் போக்குவரத்து முறை உபர் மற்றும் ஓலா போன்ற சவாரி செய்யும் நிறுவனங்கள்தான். ஓலா, ஊபர், ராபிடோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் மூலம் ஏராளமானவர்கள் பாதுகாப்பானதாகவும், விரைவில் இலக்கை அடைவதால் இத்தகைய சவாரியை தேர்ந்தெடுக்கின்றனர். அந்தவகையில், டெல்லியில் உபர் கார் சேவை ஓட்டுநராகா அப்துல் காதர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். சமீக காலமாக இவரது சவாரி வாடிக்கையாளர்களிடையே மிகபெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, காதர் தனது வண்டியில், வாடிக்கையாளர்களுகாக பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறார். இவருடனான சவாரியின்போது வாடிக்கையாளர்களுக்கு தேவையான, இலவச ஸ்னாக்ஸ், தண்ணீர் மற்றும் வைஃபை, வாசனை திரவியங்கள், மருந்துகள், கையடக்க மின்விசிறிகள், டிஷ்யூக்கள், சானிடைசர்கள் மற்றும் ஏழை குழந்தைகளுக்கான டொனேஷன் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்குகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
ரெடிட்டில் யூசர் ஒருவர் @Fancy-Past-6831 என்ற கணக்கின் மூலம் விமானத்தை விட இந்த கேபில் உள்ள வசதிகள் இன்னும் சிறப்பாக உள்ளன! என்ற கேப்ஷனுடன் பகிர்ந்த இந்த புகைப்படங்கள் வைரலானதையடுத்து, காதருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு யூசர், "விமானத்தில் கூட அத்தகைய வசதி இல்லை" என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் சிலர் "நானும் இந்த வண்டியில் பயணித்திருக்கிறேன், ஓட்டுநர் மிகவும் நல்லவர்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications