ஒருசில மணி நேரம் நடனமாட கோடிகளில் பணம்: நடிகர்களின் காட்டில் அடைமழை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலிவுட் நடிகர், நடிகைகள் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்கள் என்பது தெரிந்ததே. குறிப்பாக ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் போன்றவர்கள் 100 கோடியை தாண்டி சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி திருமண விழாக்கள், பிறந்தநாள் பார்ட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு நடனம் ஆடுவதற்கும் இந்த நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக தெரிய வருகிறது.

அந்த வகையில் பார்ட்டிகளில் நடனமாடுவதற்கு அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் நட்சத்திரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

உலகின் மிக சிறந்த 10 ஹோட்டல்கள் எது.. எவ்வளவு கட்டணம் தெரியுமா உலகின் மிக சிறந்த 10 ஹோட்டல்கள் எது.. எவ்வளவு கட்டணம் தெரியுமா

1. ஷாரு கான்

1. ஷாரு கான்

இந்த பட்டியலில் முதல் பெயர் பாலிவுட்டின் கிங் ஷாருக்கான் தான். அவரை அனைவரும் தங்கள் பார்ட்டிகளில் நடனமாட விரும்புகின்றனர். ஆனால், இதற்காக அவர்கள் பெரும் தொகையை செலுத்த வேண்டியுள்ளது. சில நிமிடங்களுக்கு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஷாருக்கான ரூ.3 கோடி வசூலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2. கத்ரீனா கைஃப்

2. கத்ரீனா கைஃப்

இந்த பட்டியலில் நடிகை கத்ரீனா கைஃப் திருமணம் மற்றும் பிறந்தநாள் நடன நிகழ்ச்சிக்காக சுமார் 3.5 கோடி பெறுகிறார். இவர் ஷாருக்கானை விட அதிகம் பெறுகிறார் என்பது ஆச்சரியமான தகவல்.

3. அக்ஷய் குமார்

3. அக்ஷய் குமார்

நடிகர் அக்‌ஷய் குமார் பெரும்பாலும் இரவு நேர விருந்துகளுக்கு செல்வதை தவிர்க்கிறார் என்றாலும் நெருக்கமானவர்களின் திருமணங்கள் மற்றும் பிறந்த நாள் பார்ட்டிகளில் இவர் கலந்து கொள்வதற்காக சுமார் ரூ.2.5 கோடி வாங்குகிறார்.

4. ஹிருத்திக் ரோஷன்

4. ஹிருத்திக் ரோஷன்

ஹிருத்திக் ரோஷனின் நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இவரும் தனியார் பார்ட்டிகளில் கலந்து கொள்வதற்காக சுமார் ரூ.2.5 கோடி வாங்குகிறார்.

5. சல்மான் கான்

5. சல்மான் கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் திரைப்படங்களில் நடிக்க நூற்றுக்கணக்கான கோடிகள் சம்பளம் வாங்கினாலும் திருமணங்கள் மற்றும் பார்ட்டிகளில் கலந்து கொள்ள அவர் 2 கோடி ரூபாய் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

6. ரன்பீர் கபூர்

6. ரன்பீர் கபூர்

இளைஞர்கள் மத்தியில் ரன்பீர் கபூரின் பிரபலம் அனைவரும் அறிந்ததே. இதுபோன்ற சூழ்நிலையில், திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சுமார் 2 கோடி ரூபாயை கட்டணமாக இவர் பெறுகிறார்.

7. தீபிகா படுகோனே

7. தீபிகா படுகோனே

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. இவர் திருமணம், பிறந்தநாள் பார்ட்டிகளில் நடனமாட ஒரு கோடி ரூபாய் கட்டணமாக வாங்குகிறார்.

8. ரன்வீர் சிங்

8. ரன்வீர் சிங்

இளம் ரசிகர்கள், ரசிகைகளை கோடிக்கணக்கில் வைத்திருக்கும் ரன்வீர் சிங் திருமணம் மற்றும் பிறந்தநாள் பார்ட்டிகளில் நடனமாட ஒரு கோடி ரூபாய் வாங்குகிறார்.

9. பிரியங்கா சோப்ரா

9. பிரியங்கா சோப்ரா

பாலிவுட், ஹாலிவுட் என கலக்கும் நடிகை ப்ரியங்கா சோப்ரா பிறந்தநாள், திருமண நிகழ்ச்சியில் நடனமாட ரு.2.5 கோடி ரூபாய் பெறுகிறார்.

10. ரன்பீர் கபூர்

10. ரன்பீர் கபூர்

பாலிவுட்டின் பிரபல நடிகரான இவர் திருமணம், பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடனமாட ரூ.1.5 கோடி பெறுகிறார்.

தமிழ் நட்சத்திரங்கள்

தமிழ் நட்சத்திரங்கள்

பாலிவுட் திரையுலகின் நடிகர்கள் போல் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா போன்றவர்கள் திருமண விழாக்களில் கலந்து கொண்டு நடனம் ஆடும் வழக்கத்தை கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These 10 cinema stars charge crores of rupees for dance in wedding-party!

These 10 cinema stars charge crores of rupees for dance in wedding-party! | ஒருசில மணி நேரம் நடனமாட கோடிகளில் பணம்: நடிகர்களின் காட்டில் அடைமழை
Story first published: Monday, July 18, 2022, 15:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X