ஜொலிக்கும் தங்கத்தின் பங்குகள்.. 57 சதவீதம் வரை லாபம்.. இந்த ஏற்றத்திற்கு என்ன காரணம் தெரியுமா?

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பு, தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால், பங்குச்சந்தைகள் அமோக லாபத்தில் வர்த்தகம் செய்ததால், தங்கப் பங்குகள் இந்த மாதத்தில் இதுவரை தங்கள் பங்குதாரர்களுக்கு நல்ல லாபத்தை அளித்து வருகின்றன. தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதாலும், பங்குச்சந்தைகள் அபரிமிதமான லாபத்தில் வர்த்தகம் செய்வதாலும், இந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் பங்குகள் 57 சதவீதம் வரை ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில், இன்று வெளியாக இருக்கும் அமெரிக்க ஃபெட்ரல் ரிசர்வ் வட்டி விகித மாற்றத்தால் தங்கத்தின் விலையில் ஏற்றம் இருக்கக்கூடும் என்பதால் நாளைய வர்த்தகத்தில் இந்த பங்குகள் மேலும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில காலமாக தங்கத்தின் விலை உயர்வு, பண்டிகை காலங்களில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் முன்னணி தங்க நிறுவனங்கள் அதிக லாபத்தை பதிவு செய்து வருகின்றன. மேலும் பல பங்கு தரகு நிறுவனங்களும் இந்த தங்கப் பங்குகளின் இலக்கு விலையை உயர்த்தியுள்ளன. மறுபுறம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது தங்கம் பங்குகள் ஏற்றத்திற்கு மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது.

 ஜொலிக்கும் தங்கத்தின் பங்குகள்.. 57 சதவீதம் வரை லாபம்.. இந்த ஏற்றத்திற்கு என்ன காரணம் தெரியுமா?

இந்த மாதத்தில் இதுவரை 54 சதவீதம் வரை உயர்ந்துள்ள பங்குகளின் பட்டியலில் திரிபுவன்தாஸ் பிஞ்சி ஜூவல்லரி லிமிடெட், மோட்டிசன்ஸ் ஜூவல்லர்ஸ் லிமிடெட், பிசி ஜூவல்லர்ஸ், சென்கோ கோல்டு, கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் தங்கமயில் ஜூவல்லர்ஸ் ஆகியவை அடங்கும்.

மோட்டிசன் ஜூவல்லரி: இந்த தங்க நகை விற்பனை நிறுவனத்தின் பங்கு இந்த மாதத்தில் இதுவரை அதன் பங்குதாரர்களுக்கு 57 சதவீத ஒட்டுமொத்த லாபத்தை அளித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் இந்தப் பங்கு 10 சதவீதம் உயர்ந்து ரூ. 282.92 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. மேலும் இந்த பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ. 285 ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2080 கோடியாக உள்ளது.

திரிபுவன்தாஸ் பிஞ்சி ஜவேரி லிமிடெட்:இந்த தங்கப் பங்கு இந்த மாதத்தில் இதுவரை அதன் பங்குதாரர்களுக்கு 54 சதவீத ஒட்டுமொத்த லாபத்தை அளித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் இந்தப் பங்கு 5 சதவீதம் சரிந்து ரூ. 291.11 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. மேலும் இந்த பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ. 360.36 ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1940 கோடியாகவும் உள்ளது.

பிசி ஜூவல்லர்ஸ்:இந்த தங்கப் பங்கு இந்த மாதத்தில் இதுவரை அதன் பங்குதாரர்களுக்கு 36 சதவீத ஒட்டுமொத்த லாபத்தை அளித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் இந்தப் பங்கு 1.1 சதவீதம் சரிந்து ரூ. 149.51 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. மேலும் இந்த பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ.153 ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 6950 கோடி ஆகும்.

சென்கோ கோல்டு ஜூவல்லரி:இந்த தங்கப் பங்கு இந்த மாதத்தில் இதுவரை 18 சதவீத லாபத்தை அதன் பங்குதாரர்களுக்கு வழங்கியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் இந்தப் பங்கு 0.27 சதவீதம் சரிந்து ரூ. 1277.95-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. மேலும் இந்த பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ. 1329 ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 461.15 கோடி ஆகும்.

கல்யாண் ஜூவல்லர்ஸ்:இந்த தங்கப் பங்கு இந்த மாதத்தில் இதுவரை 16 சதவீத லாபத்தை அதன் பங்குதாரர்களுக்கு அளித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் இந்தப் பங்கு 1.10 சதவீதம் சரிந்து ரூ. 704.60-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. மேலும் இந்த பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ.749 ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 72,700 கோடி ஆகும்.

தங்கமயில் ஜூவல்லர்ஸ்:இந்த தங்கப் பங்கு இந்த மாதத்தில் இதுவரை 10 சதவீத லாபத்தை அதன் பங்குதாரர்களுக்கு அளித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் இந்தப் பங்கு 0.90 சதவீதம் சரிந்து ரூ. 2217.10 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. மேலும் இந்த பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ. 2395 ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 6080 கோடி ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+