2023ல் சிறந்த பொறியியல் கல்லூரிகள் எது எது தெரியுமா.. இந்தியாவில் எத்தனை?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலக்கட்டத்தில் பல ஆயிரம் கல்வியாளர்கள் இருந்தாலும், இன்றும் ஒரு சில இடங்களில் படிக்க மாணவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். ஒரு சிலர் சிறந்த கல்வி நிறுவனங்கள் எதுவோ அதில் தங்களது கல்வி கனவை நனவாக்க விரும்புகின்றனர்.

குறிப்பாக சில படிப்புகளை படிக்க இந்த நிறுவனங்கள் தான் சிறந்தவை என மாணவர்கள் தீர்மானித்துக் கொண்டு தான் படிக்கவே ஆரம்பிக்கின்றனர்.

தங்கம் விலை வரும் வாரத்தில் இப்படி தான்.. சூப்பரான நிபுணர்களின் கணிப்பு..! தங்கம் விலை வரும் வாரத்தில் இப்படி தான்.. சூப்பரான நிபுணர்களின் கணிப்பு..!

படித்து முடித்து வெளியே வரும் வரும் போது சிறந்த வேலை? பெரியளவிலான சம்பளம்? என மாணவர்கள் பள்ளி பருவத்தில் இருந்தே திட்டமிட்டு படித்து வருகின்றனர். அப்படி இனி வரும் மாணவர்களுக்கு நிச்சயம் இந்த பதிவானது உதவும் எனலாம். 2023ம் ஆண்டில் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் டாப் 10 எது? அவற்றில் இந்தியாவில் எத்தனை இருக்கிறது? வாருங்கள் பார்க்கலாம்.

பொறியல் துறை ஏன்?

பொறியல் துறை ஏன்?

குறிப்பாக ஏதும் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அதிகம் தேர்தெடுப்பது பொறியியல் துறையை தான். நுழைத் தேர்வுகள் என்பது சற்று கடினமானதாக தோன்றினாலும், அதனை சமாளிக்கும்பட்சத்தில் எதிர்காலத்தில் நல்ல நிலையை எட்ட இது உதவிகரமாக இருக்கும்.

எது சிறந்தது?

எது சிறந்தது?

அப்படி தொழில் மனப்பான்மை எண்ணத்துடன் உள்ள மாணவர்கள் 2023ம் ஆண்டில் சிறந்த கல்லூரியை தேடுகிறீர்கள் எனில், நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கும், உங்களை சார்ந்தவருக்கும் பயனுள்ளதாக இருக்கலாம். இது 2023ம் ஆண்டில் எது சிறந்த கல்லூரி என்பதை இதில் பார்க்க இருக்கிறோம்.

அமெரிக்காவுக்கு முதலிடம்

அமெரிக்காவுக்கு முதலிடம்

பொறியியல் கல்லூரிகள் எனப்படும்போது முதலிடத்தில் இடத்தில் அமெரிக்கா தான் உள்ளது. அதனை தொடர்ந்து இங்கிலாந்தும், சிங்கப்பூர் பல்கலைக் கழகமும், சீனா மற்றும் சுவிட்சர்லாந்தும் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. இந்த ஆய்வினை டைம்ஸ் ஹையர் எஜூகேஷன் நடத்தியுள்ளது.

இரண்டாவது சீனா

இரண்டாவது சீனா

இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவும் முக்கிய இடம் பிடித்துள்ளது. எனினும் அமெரிக்காவினை தொடர்ந்து இங்கிலாந்தும், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவில் தான் அதிகளவிலான பல்கலைகழங்கள் இந்த சிறப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 10ல் 6 பல்கலைக் கழங்கள் அமெரிக்காவில் தான் உள்ளன.

அமெரிக்க பல்கலைக் கழகங்கள்

அமெரிக்க பல்கலைக் கழகங்கள்

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி, மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட 4ம் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கிலாந்தில் உள்ள இரண்டும், சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் தலா 1 ம் இடம் பெற்றுள்ளது.

டாப் 10 எது எது?

டாப் 10 எது எது?

ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி
மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ETH சூரிச்

எத்தனை பேரிடம் ஆய்வு

எத்தனை பேரிடம் ஆய்வு

இந்த பட்டியல் ஆனது டைம்ஸ் ஹையர் எஜூகேஷன் நடத்திய ஆய்வில், கலந்து கொண்ட 70 நாடுகளை சேர்ந்த 1306 பல்கலைக் கழகங்களில் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் டாப் 10 பட்டியலில் ஒரு இந்திய பல்கலைக் கழகமும் இடம் பெறவில்லை என்பது கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: top 10 டாப் 10
English summary

These are best engineering colleges in 2023

Do you know the full list of World's best engineering colleges for the class of 2023
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X