கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை வருமானவரியாகச் செலுத்துவது எல்லாருக்குமே வயிற்றெரிச்சலைத் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. இந்தியாவில் மிக அதிகமாக வருமான வரி வசூலிக்கப்படுகிறது. உலக நாடுகள் பலவற்றில் வருமான வரி ஒழிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க நாடுகள் அரபு நாடுகளாகும்
சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அனைத்திலுமே வருமான வரி இல்லை. இதனால்தான் பெரும் பணக்காரர்கள் உலகளவில் இருந்து வந்து பெரும் அளவில் முதலீடுகளை செய்கின்றனர். சொத்துகளை வாங்கிக் குவிக்கின்றனர். ஆசியாவில் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது மகன்கள் ஆகாஷ் அம்பானிக்கும் ஆனந்த் அம்பானிக்கும் பல விலை மதிப்புள்ள பங்களாக்களை துபாயில் வாங்கி தந்துள்ளார்.

வருமான வரி இல்லாத டாப் 8 நாடுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
பஹாமாஸ்: கரீபியன் தீவு தேசமான பஹாமாஸில் மக்களிடம் வருமான வரியை அந்நாட்டு அரசு வசூலிப்பதில்லை. இதனால் பெரும் தொழிலதிபர்கள் இந்த நாட்டில் வந்து முதலீடு செய்கின்றனர்.
பெர்முடா: சிறிய தீவு நாடான பெர்முடாவில் வருமான வரி வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் அதற்கு பதிலாக அங்கு பேரோல் வரி வசூலிக்கப்படுகிறது. தொழிலதிபர்களின் பேரோல் படி அங்கு வரி வசூலிக்கப்படுகிறது.
மொனாக்கோ: இங்கு குடியிருக்கும் மக்கள் அனைவருக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பணக்காரர்கள் நிறையபேர் இங்கு வந்து குடியேறுகின்றனர். இதனால் மொனாக்கோ பணக்காரர்களின் சொர்க்க புரியாக விளங்குகிறது.
கேமன் தீவுகள்: பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட இந்த கேமன் தீவுகள் நாடு முக்கியமான பைனான்சியல் மையமாகவும் வருமான வரி இல்லாத தேசமாகவும் விளங்குகிறது. குடிமக்களுக்கு வருமான வரி இல்லை. இதனால் இந்த நாடு தொழில் மையமாகவும் தனிப்பட்டவர்களுக்கு வரிச்சுமையைக் குறைக்கும் நாடாகவும் இருக்கிறது.
புருனய்: பெட்ரோலியம் வளம் நிறைந்த இந்த தீவு நாட்டில் மக்களுக்கு வருமான வரி விதிக்கப்படுவதில்லை. எண்ணெய் வருமானத்தில் அதிகளவு செல்வம் பெருகுவதால் இந்த நாட்டில் வருமான வரி வசூலிக்கப்படவில்லை.
ஐக்கிய அரபு அமீரகம்: அபுதாபி, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளின் சம்மேளனமாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது. இங்கு குடிமக்களுக்கு வருமான வரி விதிக்கப்படுவதில்லை. உலகளவில் அதிக பணக்காரர்களையும் தொழிலதிபர்களையும் ஈர்க்கும் நாடாக துபாய் விளங்குகிறது.
பஹ்ரைன்: இந்த தீவு தேசத்தில் மக்களுக்கு வருமான வரி கிடையாது. இதனால் அதன் பொருளாதாரம் செழிப்பாக உள்ளது. இந்த பிரதேசத்தில் மிகவும் செல்வம் மிகுந்த நாடாக பஹ்ரைன் உள்ளது.
நௌரு: மைக்ரோனேசியா பகுதியில் உள்ள தீவு நாடான நௌருவில் வருமான வரி இல்லை. இருந்தாலும் வேறு சில சிக்கல்கள் இருப்பதால் வருமான வரி தவிர வேறு வரிகள் உள்ளன.
Story written by: Jayachandran
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications