வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் எனில் இந்தியாவை அதிக செலவு ஆகும், நாம் அதிகபட்ச ஊதியம் பெற்றால் மட்டுமே வெளிநாடுகளில் தங்கி வாழ்க்கை நடத்த முடியும் என சொல்லப்படுவது. ஆனால் பல்வேறு நாடுகளும் வெளிநாட்டவர்களை பணம் கொடுத்த தங்க வைக்கின்றன தெரியுமா?..
சிலி: தென் அமெரிக்க நாடான சிலி நாட்டில், புதிதாக ஸ்டார்ட் அப் ஐடியாக்களுடன் வருபவர்கள் சிவப்பு கம்பளத்துடன் வரவேற்கப்படுகின்றனர். இதற்காக ஒரு திட்டத்தையே அந்த நாடு செயல்படுத்துகிறது. ஓராண்டு விசாவுடன் 80,000 அமெரிக்க டாலர்களையும் நிதியுதவியாக வழங்குகிறது.

அயர்லாந்து: Enterprise Ireland program என்ற திட்டம் மூலம், தொழில்முனைவோருக்கு தேவையான உதவியை வழங்கி வருகிறது. இதற்கு அயர்லாந்து குடிமகனாக இருக்க வேண்டிய தேவையில்லை. அங்கே சென்று தொழில் செய்தாலே உதவி கிடைக்கும். குறிப்பாக 30 தீவுகளில் பொருளாதார சூழல்களை மேம்படுத்த 73 லட்சம் வரை நிதியுதவு வழங்குகிறது.
நியூசிலாந்து: நியூசிலாந்து தொழில் செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு 1 கோடி ரூபாய் வரை நிதியுதவியும் வீட்டு வசதியும் வழங்கப்படுகிறது.குறிப்பாக கைடங்கா நகரில் இந்த உதவி வழங்கப்படுகிறது. இங்கே மக்கள் தொகையும் பொருளாதார நடவடிக்கைகளும் குறைந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்து: ஐஸ்லாந்தின் ஸ்டார்ட் அப் திட்டத்தில் வெளிநாட்டவர்கள் வந்து தொழில் தொடங்கினால் 41 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும் அரசு சார்பிலேயே ஓராண்டு விசாவும் கிடைக்கும்.
போர்ச்சுக்கல்: Emprego Interior MAIS திட்டத்தின் மூலம் போர்ச்சுக்கல் அரசு கிராமங்களில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு 4.3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குகிறது.
ஜப்பான்: ஜப்பானில் வளர்ச்சி அடையாத பிராந்தியங்களில் சென்று பணியாற்றுபவர்களுக்கு Regional Revitalization Program மூலம் ஓராண்டு விசாவுடன் 8.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
கிரீஸ்: ஆண்டிக்தெரா(Antikythera) என்ற தீவில் 50 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இங்கே குடிபெயர விரும்புபவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 45,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது, வீட்டு வசதியும் செய்து தரப்படுகிறது.
ஸ்விட்சர்லாந்து: Albinen நகரில் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இங்கே 45 வயதுக்கு உட்பட்டவர்கள் குடிபெயர விரும்பினால் 44 லட்சம் வரை நிதியுதவி கிடைக்கும்.
பிரிட்டன் : பிரிட்டனுக்கு உட்பட்ட சார்க் தீவில் Sark Society program to entice newcomers என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தீவில் குடிபெயர்வோருக்கு ஓராண்டுக்கு விசாவும் 16 லட்சம் நிதித்தொகையும் வழங்கப்படுகிறது.
இத்தாலி: இத்தாலியின் பல்வேறு நகரங்களிலும், குடிபெயர வருவோருக்கு என உதவிகள் செய்யப்படுகின்றன. Candela நகரில் குடியமர வரும் தனிநபருக்கு 72,000 ரூபாயும், குடும்பத்திற்கு 1.8 லட்சமும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த நகரிலேயே நிரந்தரமாக குடியிருப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications