கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒருவர் எத்தனை சிம்கார்டு வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற விதிமுறைகள் இருந்த நிலையில் தற்போது சிம் கார்டுகள் வாங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அடையாள ஆவணங்கள் இல்லாமல் சிம் கார்டு வாங்க முடியாது என்றும், KYC நடைமுறை முடிக்காமல் சிம் கார்டு வாங்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொலைத்தொடர்புத்துறையின் புதிய விதிமுறைகளின்படி ஒரு சிலருக்கு சிம் கார்டு விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம் கார்டு
சிம் கார்டு விற்பனை செய்யும் தனியார் மற்றும் அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு விதிகளில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது. புதிய விதிகளின் படி 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புதிய சிம் கார்டு விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு குறைவானர்கள்
18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆதார் கார்டு உள்பட பல்வேறு ஆவணங்களை வைத்து இருந்தாலும் அவர்களுக்கு சிம் கார்டு விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறையை அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
e-KYC
அதேபோல் 18 வயது தாண்டிய வாடிக்கையாளர்கள் புதிய சிம் கார்டு பெறுவதற்கு ஆதார் கார்டு உள்பட எந்த ஆவணத்தையும் கொண்டு சிம் கார்டு வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வாடிக்கையாளர்கள் ஆதார் அடிப்படையிலான e-KYC சரி பார்க்கப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
18 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமின்றி மனநிலை பாதிக்கப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கும் சிம் கார்டு விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு சிம் கார்டு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சிம் கார்டு வழங்கிய நிறுவனமே முழுவதுமாக பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டோர் டெலிவரி
மேலும் புதிய விதிகளின்படி வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு சென்று சிம்கார்டு டெலிவரி செய்து கொள்ளலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் சிம் கார்டு வழங்குவதற்கு முன்பு வாடிக்கையாளரின் வீட்டிலேயே e-KYC சரி செய்யப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
e-KYC முடித்த பின்னர்தான் சிம் கார்டை வழங்க வேண்டும் என்பதை அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் இதில் தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன்
மேலும் வாடிக்கையாளர்கள் புதிய சிம் கார்டு பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் புதிய விதியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications