இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வகையான போக்குவரத்து அம்சங்கள் இருந்தாலும், பைக் பயணம் என்பது சிறு குழந்தை முதல் பெரியோர்கள் வரையில் அனைவரும் விரும்பு ஒரு பயணமாக இருக்கிறது.
அதிலும் இளைஞர்கள் மத்தியில் சொல்லவே வேண்டாம். தங்களிடம் விலையுயர்ந்த கார்கள் இருந்தாலும் கூட, தங்களுக்கு பிடித்தமான பிரியமான பைக்குகளையும் வாங்கி வைத்து கொள்கின்றனர்.
அப்படி இந்தியாவில் அதிகளவில் விரும்பப்படும் 5 மலிவு விலையானது 250 சிசி பைக்குகள் பற்றித் தான் பைக்குகள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
மிகப்பெரிய சந்தை
இந்திய சந்தை பொதுவாக சந்தையாகும். இதனாலேயே பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவுக்கு படையெடுத்து வருகின்றன. குறிப்பாக இருசக்கர வாகன சந்தை என்பது மிகப்பெரிய சந்தையாகும். அந்த வகையில் இந்திய மக்களில் அதிக இடம் பிடித்த பைக் பிராண்டுகளில் யமஹா, பஜாஜ் உள்ளிட்ட பலவும் அடங்கும்.
சுசூகி ஜிக்ஸர் 250
பல முக்கிய அம்சங்களை பெற்றிருக்கும் சுசூகி ஜிக்ஸர் 250, 4 ஸ்ட்ரோக், 1 சிலிண்டர், ஆயில் கூல்டு எஞசின் என பலவற்றை கொண்டுள்ளது. இதன் கச்சிதமான வடிவமைப்பு இளைஞர்களை கவரும் விதமாகவும் ,குறைந்த எரிபொருள், எளிதான பராமரிப்பு, நீண்டகால ஆயுள் என பல அம்சங்களையும், உயர் செயல்திறனையும் கொண்டுள்ளது. இதன் விலை 1,81,400 ரூபாயாகும்.
பஜாஜ் டோமினார்
பஜாஜ் டோமினார் இந்தியாவில் பெரியளவில் விருப்பப்படும் பைக்குகளில் இதுவும் ஒன்று. இந்த பைக் ரேசிங் ரெட், ஸ்பார்கிளிங் பிளாக் மற்றும் சிட்ரஸ் ரஷ் என மூன்று கலர்களில் கிடைக்கிறது.180 கிலோ எடையுள்ள இந்த பைக் 27 ஹெச் பி மற்றும் 23.5 என் எம் டார்க்கை வெளியேற்றும். இது லிக்யூடு கூல்டு இன்ஜினினையும் கொண்டுள்ளது. இதன் விலை 1,75,002 ரூபாயாகும்.
QJMotor SRC
சீன நிறுவனமான க்யூஜே மோட்டார், க்யூஜே மோட்டார் எஸ் ஆர்சி 250 பைக்கினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக வந்துள்ள இந்த வாகனம், பல்வேறு அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. இதன் விலை 1.99 லட்சம் ரூபாயாகும். இந்த சீனா பிராண்டானது 249 சிசி, 4 வால்வுகள் கொண்ட ஆயில்-கூல்டு மோட்டாரை கொண்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 17.4 ஹெச்பி பவரையும், 17 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
யமஹா FZ25
இன்றைய இளைஞர்கள் அதிகம் விரும்பும் ஒரு பைக்குகளில் யமஹா FZ25- ம் ஒன்று. இந்த யமஹா FZ25 பைக் ஆனது 249 சிசி ஏர்-கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இதன் விலை 1,47,900 ரூபாயாகும்.
பஜாஜ் பல்சர் N250 சிங்கிள் சேனல் ஏபிஎஸ்
பஜாஜ் நிறுவனத்தின் பஜாஜ் பல்சர் N250 சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பைக் விலையானது, 1,40,666 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. இந்த பை 4 ஸ்ட்ரோக், 2 வால்வு, ஆயில் கூல்டு 250சிசி எஞ்சின் கொண்ட பைக் ஆகும். இந்த இருசக்கர வாகனமும் இந்தியர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications