சமீபத்தில் இந்தியா வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு துறைமுகக் கட்டுப்பாடுகளை விதித்தது. அண்மையில் வங்கதேசத்தின் இடைக்கால தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் சீனாவுக்கு பயணம் செய்தார். அப்போது இந்தியாவின் வடகிழக்கு பகுதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். இதனையடுத்து சில வாரங்களுக்கு பிறகு இந்திய அரசு வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரெடிமேட் ஆடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.
யூனுஸ் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை கடலுக்கு நேரடி அணுகல் இல்லாத பகுதி என்று குறிப்பிட்டார். அதாவது வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மேகாலயா, சிக்கிம், போன்றவை இந்தியாவின் நிலப்பகுதியிலேயே இருந்தாலும் வங்கதேசத்தின் வழியாகத் தான் பிற கடல் பகுதிக்கு செல்கிறது.

இந்நிலையில் யூனுஸ் கூறிய கருத்து இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் கருத்து வேறுபாடுகள் மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் வடகிழக்கு மாநிலங்களுக்கு கடல் வழி இல்லை என்பதை வெளிப்படையாக சொல்வது போல யூனுஸ்-இன் கருத்து இருந்தது.
இந்தியாவை பலவீனமாக பேசியதோடு வங்கதேசத்தின் உதவியால் தான் கடல் வழியாக இங்குள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது போல அவர் கூறிய கருத்து இந்தியாவின் தன்மானத்தை குறைத்து மதிப்பிடுவது போல தோன்றியதால் இந்தியா இத்தகைய நடவடிக்கையை எடுத்தது.
இந்தியாவுக்கு மலிவான ரெடிமேட் ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்றவை இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் எல்லை பகுதிகள் வழியாகத்தான் இந்தியாவை வந்தடைந்தன. ஆனால் தற்போது இந்த வழித்தடத்தை தான் அரசு தடை செய்துள்ளது.
ஏற்கனவே வங்கதேசத்தின் பொருளாதாரம் பலவீனமானதாக உள்ளது. உலகப் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் போன்றவற்றின் காரணமாக பல பிரச்சினைகளை வங்கதேசம் எதிர்கொண்டு வருகிறது. வங்கதேசத்தில் இருந்து அதிக அளவிலான ஆடைகள் இந்தியாவுக்கு வருகின்றன.
வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வங்கதேசத்தில் இருந்து ஆடை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு இறக்குமதிக்கு தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவற்றோடு இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கும் வந்துள்ளன. கடந்த மாதம் டாக்கா சில இந்திய தயாரிப்புகளுக்கு கட்டுப்பாடு விதித்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தியாவும் இந்த முடிவை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் என்னென்ன?: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்குவங்க பார்டரில் இருந்து பல்வேறு பொருட்கள் இறக்குமதியாகிறது. தடை செய்யப்பட்ட பொருட்களில் ரெடிமேடு ஆடைகள், பிளாஸ்டிக் டோர்கள், வுட்டன் பர்னிச்சர்கள், பதப்படுத்தப்பட்ட பானங்கள், உணவுகள் பழ சுவை கொண்ட பானங்கள், பருத்தி, பருத்தி கழிவுகள் போன்றவை இறக்குமதியாகிறது.
மேற்கண்ட பொருட்களைத் தவிர பேக்கரி பொருட்கள், சிப்ஸ், மிட்டாய்கள், பிளாஸ்டிக், பிவிசி டோர்கள் மற்றும் வுட்டன் ஐட்டங்கள் போன்றவற்றுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இது போன்ற பொருட்களின் விலை இந்தியாவில் உயரும் வாய்ப்புள்ளது. ரெடிமேட் வங்கதேச ஆடைகள் குறைந்த விலைக்கு பெயர் பெற்றவை. எனவே இது போன்ற பொருட்களை தடை செய்வது இந்தியாவில் அதன் விலையை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications