சென்னை: வருமானவரித்துறையினரால் வழங்கப்படும் பான் கார்டு, வங்கி சார்ந்த அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமான ஆவணமாக உள்ளது. பான் கார்டில் உள்ள 10 இலக்க எண் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மேலும், இந்த பான் கார்டு, ஆதார் கார்டுடன் இணைக்க மத்திய அரசு பல கால அவகாசங்களைத் தந்தது. ஆனால், அதனை பொருட்படுத்தாத சிலரின் பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ள.
இந்நிலையில், சிலருக்கு இந்த பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டும், என்ற எந்த வித அவசியமும் இல்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் யார்? என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

மத்திய அரசு ஏற்கனவே ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. இதனை பொருட்படுத்தாமல், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை இணைக்காத, சுமார் 11.48 கோடி மக்களின் பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு அவர்களிடமிருந்து ரூ. 600 கோடி ரூபாய்க்கு மேல் அபராதமும் வசூலித்துள்ளது. ஆனால், சிலருக்கு பான் மற்றும் ஆதார் கார்டு இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்தெந்த நபர்கள் பான் கார்டு இணைக்க வேண்டாம் என்பது குறித்து பார்ப்போம்.
யார் பான் கார்டுகளை இணைக்கத் தேவையில்லை?: சிலர் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை. இவர்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களும் அடங்குவர். இது தவிர, வருமான வரிச் சட்டத்தின்படி, இந்தியக் குடியுரிமை இல்லாதவர்களும் பான் கார்டை இணைக்கத் தேவையில்லை.
பான் கார்டு இணைக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்?: இதுவரை தங்கள் பான் கார்டை இணைக்காத பான் கார்டு வைத்திருப்பவர்கள், கூடிய விரைவில் இதைச் செய்ய வேண்டும். பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை என்றால், பான் கார்டு தானாகவே செயலிழக்கப்படும். அதாவது இது ஒரு ஆவணமாகப் பயன்படுத்தப்படாது.
இது தவிர, பல நிதி பரிவர்த்தனைகளும் இணைக்காத நபர்களுக்கு தடை செய்யப்படும். பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் ஐடிஆர் தாக்கல் செய்ய முடியாது. இது தவிர வங்கி தொடர்பான பரிவர்த்தனைகளும் நிறுத்தப்படும். அரசின் பல திட்டங்களின் பலன்கள் கூட கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.
பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க, மத்திய அரசு பல்வேறு கால அவகாசங்களைத் தந்தது. முதலில் இதற்காக 1 வருடம் கால அவகாசம் தரப்பட்டது. அதற்கு பிறகு 6 மாதம் கூடுதல் அவகாசமாக கொடுக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் பான் மற்றும் ஆதார் கார்டுகளை இணைக்காத நபர்களிடமிருந்து ரூ. 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அது ரூ. 1000 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் சுமார் 57.25 கோடி மக்கள் பான் மற்றும் ஆதார் கார்டுகளை இணைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதில் சுமார் 70.24 கோடி நபர்கள் பான் கார்டு வைத்துள்ளனர்.இந்நிலையில் மத்திய அரசு, 80 வயதுக்கு மேற்பட்டவர்களும், வருமான வரிச் சட்டத்தின்படி, இந்தியக் குடியுரிமை இல்லாதவர்களும் பான் கார்டை இணைக்கத் தேவையில்லை எனக் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications