ஏஐ, ஆட்டோமேஷன், மெஷின் லேர்னிங், டேட்டா சையின்ஸ், கிளவுட் ஆகியவற்றின் எழுச்சி கடந்த 5 வருடத்தில் டெக் துறையை தலைகீழாக மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை. இத்தொழில்நுட்பத்தின் இணைப்பு பல புதிய விஷயங்களை மக்களுக்கு கொடுத்துள்ளது, இதனால் ஐடி சேவை துறை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க டெக் வேலைவாய்ப்பு சந்தை குறித்த ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஒரு காலத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கிய துறையாக கருதப்பட்ட தொழில்நுட்பத் துறை தற்போது பணி நீக்கங்கள் மற்றும் புதிய வேலைவாய்ப்பில் சரிவு போன்ற பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது.

அமெரிக்காவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு தளமான Indeed டெக் ஊழியர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. தற்போதைய அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையில் அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் சமமாக மதிப்பிடப்படவில்லை என்ற ஷாக் தகவலை வெளியிட்டு உள்ளது.
Indeed நடத்திய இந்த ஆய்வில், தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் பெருமளவு குறைந்துள்ளன. ஆனால், AI மற்றும் மெஷின் லேர்னிங் பணிகளுக்கு தொடர்ந்து அதிகப்படியான டிமாண்ட் உள்ளதாக அறிவித்துள்ளது. அதேவேளையில் லெகசி மற்றும் தொடக்க நிலை வேலைகள் வேகமாக குறைந்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
Indeed நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் பிரெண்டன் பர்னார்ட் கூறுகையில், பல பதவிகள் தற்போது முக்கயதுவம் இழந்துள்ளது, இதனால் வேலை தேடுபவர்கள் தங்கள் திறனையும், உத்திகளையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். தற்போது 100க்கு 95 நிறுவனங்கள் ஆட்டோமேஷன் மற்றும் ஏஐ ஆகியவற்றை பயன்படுத்தி ஒவ்வொரு ஊழியரின் திறனை மேம்படுத்த வேண்டும் என திட்டமிடுவதால் இந்த மாற்றம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
டெக் துறையில் தற்போது பிரெண்ட் என்ட் வெப் டெவலப்பர்ஸ், QA டெஸ்டர்ஸ், ஐடி சப்போர்ட் ஸ்பெஷலிஸ்ட், பிளாக்செயின் டெவலப்பர்ஸ் போன்ற பணிகள் முக்கியதுவம் இழந்து வருகிறது. இதேபோல் AI/ML Engineers, Cybersecurity Analysts, Cloud Architects, Data Scientists போன்ற பணிகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் உருவாகியுள்ளது.
Indeed தளத்தில் இந்த பதவிகளுக்கு வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை குறைந்தது:
வெப் டெவலப்பர்: -72%
.NET டெவலப்பர்: -68%
ஜாவா டெவலப்பர்: -68%
ப்ரென்ட் என்ட் டெவலப்பர்: -67%
iOS டெவலப்பர்: -62%
UX டிசைனர்: -61%
புரோகிராமர் ஆயலிஸ்ட்: -58%
QA பொறியாளர்: -57%
சீனியர் ஜாவா டெவலப்பர்: -55%
சாப்ட்வேர் டெஸ்ட் பொறியாளர்: -53%
Indeed தளத்தில் இந்த பதவிகளுக்கு வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது:
SAP லீட்: +356%
AI/ML இன்ஜினியர்: +334%
ஓராக்கிள் HCM மேனேஜர்: +263%
டேட்டா சென்டர் டெக்னிஷன்: +144%
SAP கன்செல்டென்ட்: +98%
ஓராக்கிள் கன்செல்டென்ட்: +67%
ஸ்டாப் சாப்ட்வேர் இன்ஜினியர்: +60%
மெஷின் லேர்னிங் இன்ஜினியர்: +59%
டெக்னாலஜி லீட்: +51%
பிளாட்ஃபார்ம் இன்ஜினியர்: +43%


Click it and Unblock the Notifications