மும்பை, மகாராஷ்டிரா: இன்றைய தேதிக்கு கொலை கொள்ளை போன்ற பெரிய குற்றங்கள் எல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, திருட்டுத் தனங்களும் மறு பக்கம் செமயாக தினுசு தினுசாக நடந்து கொண்டிருக்கிறது.
அப்படி ஒரு சுவாரஸ்யமான திருட்டைத் தான் இன்று பார்க்கப் போகிறோம்.
அப்படி என்ன பொருளை திருடிவிட்டார்? ஏன் இந்த திருடனின் திருட்டுத் தனத்தைக் கண்டு எல்லோரும் சிரிக்கிறார்கள். வாங்க பாப்போம்.
திருடன் விவரம்
அந்த திருடனின் பெயர் சஞ்ஜீவ் வர்மா. வயது 19 தான் ஆகிறதாம். இவர் மத்திய மும்பையில் தான் வாழ்ந்து வருகிறாராம். இந்த திருடன் கடந்த புதன்கிழமை இரவு, மும்பை மரைன் டிரவ் பகுதியில், கிரிகுஞ்ச் கட்டடத்தில் 3-வது தளத்தில் இருக்கும் வீட்டில் திருடச் சென்று இருக்கிறான்.
வீட்டு ஓனர்
கிரிகுஞ்ச் கட்டடத்தில் 3-வது தளத்தில் இருக்கும் வீடு, சித்தாந்த் சாபோ என்கிற பிசினஸ் மேனுக்குச் சொந்தமானதாம். இந்த வீட்டை சமீபத்தில் தான் வாங்கி இருக்கிறாராம். எனவே அதிகமான பொருட்களை எல்லாம் அந்த புதிய வீட்டுக்குக் கொண்டு வரவில்லையாம். ஆனால் அதே கிரிகுஞ்ச் கட்டடத்தில் வேறு வீட்டில் வசித்து வருகிறாராம்.
திருடன் சபலம்
திருட வந்த சஞ்ஜீவ் வர்மா, பால்கனி வழியாக வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறான். நுழைந்த உடன் இரும்பு பீரோவை எல்லாம் உடைத்துப் பார்த்து இருக்கிறான் போல. அதன் பின் குளிர்சாதன பெட்டியில் இருந்த ஒஸ்தி சரக்கான சாம்பெயினையும் (Champagne)திருடன் பார்த்து இருக்கிறான் போல.
போடு சரக்க
"சரி வந்தது தான் வந்துட்டோம். ஒரு நாலு ரவுண்ட் சாம்பெயினை (Champagne) அடிச்சிட்டு போவோம்"னு நினைத்திருக்கிறான் போல. ஆகையால் குளிர்சாதன பெட்டியில் இருந்த, சில் சரக்கை மெல்ல அடிக்கத் தொடங்கி இருக்கிறான். ஒரு முழு பாட்டில் சாம்பெயின் காலி. இன்னொரு பாட்டிலில் பாதியைக் குடித்துவிட்டு, பாக்கியை பத்திரமாக ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டான் திருடன்.
மட்டை
சாம்பெயின் மது தானே. அதில் ஒன்றரை பாட்டிலை முடித்தால் போதை ஏறாதா..? போதை அதிகமானதால், சுய நினைவு இல்லாமல், திருட வந்த கிரிகுஞ் வீட்டின் 3-வத தளத்தில் இருக்கும் வீட்டு சோபாவிலேயே மட்டை ஆகிவிட்டான் திருடன் சஞ்ஜிவ் வர்மா. திருடன் மட்டையாவதற்கு முன்பு, காலை வேளையில் லைட் எரிந்து இருக்கிறது.
சந்தேகம்
அப்போது சித்தாந்த் சாபோவின் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவர் அதைக் கவனித்து இருக்கிறார். சரி முதலாளியின் புதிய வீட்டில், அதுவும் காலை நேரத்தில் ஏன் விளக்கு எரிந்தது என பார்த்துவிட்டு போக வந்திருக்கிறார். கதவைத் திறக்க முயன்றால் முடியவில்லை. கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டு இருந்ததை புரிந்து கொண்டார் அந்த வேலைக்காரர்.
வீட்டு ஓனர் வருகை
அதன் பின், சித்தாந்த் சாபோவுக்கு விஷயத்தைத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். வீட்டுக் கதவை உடைத்துப் பார்த்து இருக்கிறார்கள். திருடன் சஞ்ஜிவ் வர்மா சரக்கடித்து மட்டையாகி இருப்பதை புரிந்து கொண்டார்கள். உடனடியாக போலீஸுக்கு விவரங்களைச் சொல்லி அழைத்து இருக்கிறார்கள். காவலர்களும் உடனடியாக வந்து போதையில் மட்டையாகி இருந்த திருடனைப் எழுப்பி விசாரித்து இருக்கிறார்கள்.
வழக்குப் பதிவு
சஞ்ஜிவ் வர்மாவின் மீது சட்டப் பிரிவு 454, பிரிவு 457, பிரிவு 380, பிரிவு 427 ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்களாம். கடந்த வியாழக்கிழமையே சஞ்ஜிவ் வர்மா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்திலும் சஞ்ஜிவ் வர்மா, தான் சித்தாந்த் சாபோவின் வீட்டில் நுழைந்து, சாம்பெயினை அடித்து மட்டையாகி விட்டதாகவும், எதையும் திருடவில்லை எனவும் சொல்லி இருக்கிறார்.
நம் திருடரோட கதைய கேட்டு ஜட்ஜ் ஐயாவே சிரிச்சிருப்பார் போலருக்கே..!


Click it and Unblock the Notifications